ஆளுநரை மீண்டும் சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, இன்னும் சற்று நேரத்தில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கிறார்.

படத்தின் காப்புரிமை DIPR
Image caption எடப்பாடி பழனிச்சாமி

ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த அழைப்பின்பேரில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் சிலர் ஆளுநரைச் சந்திக்க அங்கு சென்றிருப்பதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி யார்?

ஆளுநர் யாரை அழைக்க வேண்டும்? என். ராம் பேட்டி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஜெயலலிதா சமாதியில் சசிகலா மும்முறை சபதம்

ஆட்சியமைக்க முறைப்படி அழைப்பு விடுப்பதற்காகத்தான் ஆளுநர் அழைத்திருக்கலாம் என்று மணியன் தெரிவித்தார்.

பகல் 11.30 மணிக்குப் பிறகு இந்தச் சந்திப்பு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை, சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகி, அதிமுக பொதுச்செயலர் சசிகலா சிறை செல்ல வேண்டியது உறுதியான நிலையில், எடப்பாடி பழனிச்சாமி புதிய சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அன்றைய தினமே ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க அவர் உரிமை கோரினார். நேற்று இரண்டாவது முறையாக சந்தித்துப் பேசினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்