பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் ஏன் ? : ஸ்டாலின்

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்க கொடுக்கப்பட்டுள்ள 15 நாட்கள் கெடுவில் மிகப்பெரிய குதிரை பேரங்கள் நடைபெற வாய்ப்புள்ளது என திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Facebook/M.K.Stalin

ஆளுநரின் இந்த முடிவை வரவேற்றுள்ள ஸ்டாலின், பெரும்பான்மையை நிருபிக்க 15 நாட்கள் என்பது நீண்ட கால அவகாசம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்கனவே ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகிய இரு தரப்புகளிலும் குதிரை பேரங்கள் நடந்து வந்த சூழலில், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை காட்ட தற்போது கொடுக்கப்பட்டுள்ள இந்த 15 நாட்கள் அவகாசம் மிகப்பெரிய அளவிலான குதிரை பேரங்கள் நடப்பதற்கான வாய்ப்பை உருவாக்கும்; அதனை ஆளுநர் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்