எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவை பட்டியல் வெளியானது

தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள எடப்பாடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் மொத்தம் 31 சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் பெறவுள்ளனர்.

படத்தின் காப்புரிமை TNDIPR

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கவுள்ள எடப்பாடி பழனிச்சாமி பொதுத்துறை, இந்திய நிர்வாகத்துறை, உள்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல துறைகளுக்கு பொறுப்பு வகிக்கிறார்.

படத்தின் காப்புரிமை TNDIPR

சி.ஸ்ரீனிவாசன் வனத்துறை அமைச்சராகவும், கே.ஏ.செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலத்துறை அமைச்சராகவும், கூட்டுறவுத்துறை அமைச்சராக கே.ராஜூவும், மின்சாரம் மற்றும் கலால்துறையின் அமைச்சராக பி.தங்கமணியும் பொறுப்பேற்க உள்ளனர்.

படத்தின் காப்புரிமை TNDIPR

நகராட்சி நிர்வாகம் மற்றும் கிராமப்புற மேம்பாடு அமைச்சராக எஸ்.பி.வேலுமணியும், மீன்வளத்துறை அமைச்சராக டி.ஜெயக்குமாரும், சட்ட, நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகளின் அமைச்சராக சி.வி.சண்முகமும், உயர்கல்வித்துறை அமைச்சராக கே.பி.அன்பழகனும், சமூக நலத்துறை மற்றும் மதிய சத்துணவு திட்டத்தின் அமைச்சராக டாக்டர் சரோஜாவும் பொறுப்பேற்க உள்ளனர்.

படத்தின் காப்புரிமை TNDIPR

முன்னர், தமிழகத்தில் ஆட்சியமைப்பது குறித்து நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலையில், சசிகலா அணி ஆதரவு எம்.எல்.ஏக்களின் அதிமுக பிரிவு சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரை சந்தித்தார்.

ஆளுநரின் அழைப்பில் பேரில் நடந்த இந்த சந்திப்பை அடுத்து அவருக்கு அமைச்சரவையை அமைக்க ஆளுநர் ராவ் அழைப்பு விடுத்ததாகவும், 15 நாட்களுக்குள் தனது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் அவர் நிரூபிக்கவேண்டும் என்று அவர் கூறியிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இன்று மாலையே பதவி ஏற்பு நிகழ்ச்சி நடக்கும் .

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்