வெளிநாட்டில் இருந்தாலும் அதிகாரிகள் குடிக்க கூடாது - பிஹார் உத்தரவு

பீஹார் அதிகாரிகள், மாநிலத்திற்கு வெளியில் இருந்தாலும் அல்லது வெளிநாட்டில் இருந்தாலும் கூட மது அருந்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவின் பிகார் மாநில கடந்த ஆண்டு மதுவிலக்கு சட்டம் கொண்டுவந்த்து..

பணியில் இல்லாவிட்டால் கூட இந்த புதிய விதியை உதாசீனப்படுத்தினால், நீதிபதிகள், மேஜிஸ்ட்ரேட்டுகள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் இடைநீக்கம், பதவி நீக்கம் அல்லது ஊதிய வெட்டு ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த மாநிலத்தின் மது தடை சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த திருத்தம் பிகார் முதலமைச்சராக இருக்கும் நிதிஷ்குமாரின் முன்முயற்சியில் வந்துள்ளது.

குற்றச் செயல்களை குறைத்திருக்கும் இந்த முயற்சியை புரட்சிகரமானது என்றும், இந்த ஒரே ஒரு செயல்பாடு மக்களின் உணவு பழக்கத்தை மேற்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்