குடும்ப ஆட்சிக்கு எதிராக அழுத்தம் தரும் மக்களைக் கைது செய்யக்கூடாது - ஓ.பன்னீர்செல்வம்

ஒரு குடும்ப ஆட்சி அமையக்கூடாது என மக்கள் போராடுவதாகவும் அவர்களை கைதுசெய்து துன்புறுத்தக்கூடாது எனவும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் காவல்துறையிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக அ.தி.மு.கவின் சசிகலா பிரிவைச் சேர்ந்த எடப்பாடி கே. பழனிச்சாமி நேற்று பதவியேற்றார்.

இதையடுத்து, இன்று மாநிலம் முழுவதும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதியில் பொதுமக்கள் தங்கள் எம்எல்ஏக்களை ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருக்க வலியுறுத்த வேண்டுமென நேற்று பன்னீர்செல்வம் தரப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்தது.

இந்த நிலையில், இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் பன்னீர்செல்வம், ஒரு குடும்ப ஆட்சி அமைவதை பொறுத்துக்கொள்ளாமல் மக்கள் தங்கள் மன உணர்வுகளை அமைதியான முறையில் தங்கள் எம்எல்ஏக்களிடம் தெரிவித்துவருவதாகவும் அப்படி கண்டனம் தெரிவிக்கும் பொதுமக்களை காவல்துறையினர் கைதுசெய்து திருமண மண்டபங்களில் அடைப்பதாகவும் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

அவர்களை விடுவிப்பதோடு, காவல்துறையினர் பாரபட்சமின்றி செயல்பட வேண்டுமென்றும் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில், சென்னை மெரினா கடற்கரையில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்க மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நடராஜ் முடிவு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏகளின் பேட்டி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க :பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்