கணவரின் செயலால் இளவரசிக்கு மில்லியன் கணக்கான டாலர்களை அபராதமாக விதித்த நீதிமன்றம்

அரசர் ஃபெல்லீப்பேவின் தங்கையான இளவரசி கிரிஸ்டீனா மோசடி ஒன்றுக்கு துணை இருந்ததாக கூறப்பட்ட வழக்கு முடிவில், ஸ்பெயின் நீதிமன்றம் அவரை விடுவித்து தீர்ப்பு அளித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இளவரசியின் கணவர் இனாகி உர்டண்கரின் சுமார் கால் மில்லியனுக்கும் அதிகமான தொகையை அபராதமாக செலுத்த நீதிமன்றம் உத்தரவு

முடியாட்சி மீண்டும் கொண்டுவரப்பட்ட 1975 ஆம் ஆண்டிலிருந்து அரச குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் குற்றவாளி கூண்டில் நின்றது இதுவே முதன்முறையாகும்.

ஆனால், நீதிமன்றம் இளவரசியின் கணவர் இனாகி உர்டண்கரின் ஏற்படுத்திய சேதங்களை ஈடு செய்யும் விதமாக இளவரசிக்கு சுமார் கால் மில்லியனுக்கும் அதிகமான தொகையை அபராதமாக விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

முறைகேடு மற்றும் வரி ஏய்ப்பு செய்ததற்காக குற்றவாளி என்ற அறிவிக்கப்பட்ட இனாகிக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்