கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தாலும், அந்த வாக்கு செல்லுபடியாகும் : மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன்

தமிழக சட்டப்பேரவையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சனிக்கிழமை நடக்க உள்ளது. ஆனால், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 10 பேர் இந்த வாக்கெடுப்பில் எப்படி வாக்களிப்பார்கள் என்பது தெளிவாகவில்லை. கட்சியின் கொறடா அளிக்கும் உத்தரவை எதிர்த்து அவர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தால், அவர்களது சட்டமன்ற உறுப்பினர் பதவி, கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் பறி போகும் வாய்ப்பு இருக்கிறதா?

படத்தின் காப்புரிமை Getty Images

இது குறித்து , கட்சி தாவல் தடை சட்டம் குறித்த பல வழக்குகளைக் கையாண்டிருக்கும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் பிபிசி தமிழோசையிடம் கூறுகையில், இந்த சட்டத்தின் அடிப்படையில், ஒரு சட்டமன்ற கட்சியின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறைவில்லாத உறுப்பினர்கள் கட்சியிலிருந்து பிரிந்துசென்று வேறு ஒரு கட்சியுடன் இணைந்தால் மட்டுமே அவர்களது பதவி தப்பும் என்றார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஓ.பி.எஸ் மீது கட்சித் தாவல் தடை சட்டம் பாயுமா?

ஆனால் அவர்கள் கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தாலும், அந்த வாக்கு செல்லுபடியாகும் என்றார் விஸ்வநாதன். அவர்கள் மீது நடவடிக்கை என்பது முறையான நோட்டிஸ் கொடுத்து விளக்கங்கள் கேட்ட பின்னரே எடுக்க முடியும். உடனடியாக எடுத்தால், அது செல்லுபடியாகாது என்றார்.

சபாநாயகரின் முடிவுகள் அவையின் அன்றாடப் பிரச்சனைகள் சார்ந்த்தாக இருந்தால் அவை நீதிமன்றங்களால் மறு பரீசலனைக்குள்ளாக்க முடியாது , ஆனால் அரசியல் சட்ட உரிமைகளை மீறுவதாக இருந்தால், உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றங்கள் மறு பரீசலனை செய்ய முடியும் என்றார்.

பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களிக்க தி.மு.க முடிவு

சுதந்திரமாக செயல்படுவாரா எடப்பாடி பழனிச்சாமி ?

பழனிச்சாமி அரசு பலத்தை நிரூபிக்க நாளை பேரவைக் கூட்டம்

சிரித்தாலும் கண்ணீர் வரும் : இன்றைய கார்ட்டூன்

சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்