வாக்கெடுப்பை புறக்கணிக்கிறார் கோவை வடக்கு அதிமுக எம்.எல்.ஏ

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தரப்பில் இருந்த கோவை வடக்குத் தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் இன்று சட்டப்பேரவையில் நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த 10 நாட்களாக சசிகலா தரப்பின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியிருந்த கூவத்தூர் விடுதியில் இருந்த அருண்குமார், காலை சட்டமன்றத்திற்கு வந்தபோது செய்தியாளர்களிடம் பேசினார்.

தனது மாவட்ட மக்கள் தன் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றும் தற்போது அதிமுக ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலை காரணமாக இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.

''கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் தற்போதைய தலைமையை விரும்பவில்லை. நான் அதிமுகவின் கோவை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும் விலகவுள்ளேன்,'' என்றார் அருண்குமார்.

இரண்டு நாட்களுக்கு முன் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய சமயத்தில், அருண்குமாரின் இந்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, இன்று காலை 11 மணி அளவில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

அருண்குமாரின் முடிவு காரணமாக தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் அணியின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 122ஆக குறைந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

அதிமுக பிளவு - 1988 திரும்புகிறதா ?

சிரித்தாலும் கண்ணீர் வரும் : இன்றைய கார்ட்டூன்

சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்