மெரினாவில் தர்ணாவில் ஈடுபட்ட ஸ்டாலின், திமுகவினர் கைது

சட்டப்பேரவையில் திமுகவினர் தாக்கப்பட்டதாகக் கூறி, மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் முக்கிய திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மெரினா கடற்கரையில் தர்ணா

சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிப்பு (புகைப்படத் தொகுப்பு)

ஆனால், அவர்களை அப்புறப்படுத்த முடியாத அளவில் பெருந்திரளாக திமுக தொண்டர்கள் போலிஸ் வாகனங்களைத் தடுத்து நிறுத்தினர்.

இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

இன்று சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளை கண்டித்து, திமுக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிற பிரமுகர்கள் முதலில் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநரை சந்தித்துவிட்டு, பிறகு மெரினா கடற்கரைக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காந்தி சிலை அருகே அவர்கள் குழுமிய நிலையில் அவர்களுக்கு ஆதரவாக பெருந்திரளான திமுக தொண்டர்களும் குழும, கடற்கரை சாலையில் நெருக்கடி ஏற்பட்டது.

இதனால் போக்குவரத்து தடைபட, போலிஸ் உயரதிகாரிகள் ஸ்டாலின் மற்றும் பிற திமுகவினரை சந்தித்து கலைந்து போகுமாறு வற்புறுத்தினர். அவர்கள் கலைந்து போக மறுக்கவே , போலிஸ் அதிகாரிகள் அவர்களை கைது செய்து போலிஸ் வேன்களில் ஏற்றினர்.

ஆனால் தங்கள் தலைவர்கள் கைது செய்யப்படுவதை எதிர்த்து, திமுக தொண்டர்கள் போலிஸ் வாகன்ங்களை மறித்து ஆர்ப்பாட்ட்த்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

சட்டப்பேரவையிலிருந்து ஸ்டாலின் உட்பட திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்

புனித ஜார்ஜ் கோட்டைக்கு செல்லும் அனைத்து சாலைகளும் அடைப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்