குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க உண்ணாவிரத போராட்டம்

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, சட்டமன்றத்திலிருந்து தி.மு.க உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்தில் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK
Image caption குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் : மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்ற எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் அதன் பெரும்பான்மையை நிரூபிக்க நேற்று (சனிக்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தி.மு.கவின் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின், ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்ட வேண்டும் என்று சபாநாயகர் தனபாலுக்கு கோரிக்கை விடுத்தார்.

ஆனால், சபாநாயகர் தனபால் ஸ்டாலினின் கோரிக்கையை நிராகரித்தார்.

சட்டப்பேரவையிலிருந்து ஸ்டாலின் உட்பட திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்

'சட்டை' மன்றம் : பிபிசி தமிழின் இன்றைய கார்ட்டூன்

அதனைத்தொடர்ந்து, அங்கு ஏற்பட்ட கூச்சல் குழப்பம் காரணமாக சபை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும், தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்றவும் சபாநாயகர் தனபால் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

பிற்பகல் மீண்டும் சபை கூடிய நிலையில், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிந்த தி.மு.க உறுப்பினர்களை சபை காவலர்கள் வெளியேற்றினார்கள்.

எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினும் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டார்.

சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிப்பு (புகைப்படத் தொகுப்பு)

ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மெரினா கடற்கரையில் தர்ணா

சட்டை கிழிந்த நிலையில் எம்.எல்.ஏக்களுடன் பேரவையிலிருந்து வெளியேறிய ஸ்டாலின் சபாநாயகர் தனபால் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை தெரிவித்து மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

மாலை 6 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க எம்.எல்.ஏக்கள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இச்சூழலில், சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 22 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தை தி.மு.கவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த உண்ணாவிரதத்தில் ஒத்தக் கருத்துடைய அமைப்புகளும் மற்றும் பொது மக்களும் பெருந்திரளாக பங்கேற்குமாறு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று மதியம் ஒரு மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தி.மு.கவை வெளியேற்றிவிட்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பு செல்லாது என்று கூறி ஆளுநரிடம் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளதாகவும், விரைவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து இது குறித்து முறையிடுவோம் என்றும் கூறினார்.

புனித ஜார்ஜ் கோட்டைக்கு செல்லும் அனைத்து சாலைகளும் அடைப்பு

சட்டசபையில் அமளி --திமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவு

ரகசிய வாக்கெடுப்பு இல்லை; சட்டமன்ற வாயில்கள் அடைக்கப்பட்டன

வாக்கெடுப்பை புறக்கணிக்கிறார் கோவை வடக்கு அதிமுக எம்.எல்.ஏ

சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிப்பு (புகைப்படத் தொகுப்பு)

சட்டப்பேரவை நிகழ்வுகள்: திமுக அரசியல் முன்னிலையைக் கைப்பற்றியிருக்கிறது - ராம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு - கோவையில் ஆர்ப்பாட்டம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்