ஸ்காட்லாந்து விடுதலைக்கு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த விரும்பும் ஸ்டர்ஜன்

ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து சுதந்திரம் பெற்று தனி நாடாகும் நோக்கில் புதியதொரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவதற்கு அதிகாரம் பெற விரும்புவதாக ஸ்காட்லாந்து முதன்மை அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் அறிவித்திருக்கிறார்.

Image caption பிரிட்டிஷ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக நாடாளுமன்றம் முடிவு செய்வது ஏற்க முடியாததாக அமையும் - டேவிட் டேவிஸ்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஜக்கிய ராஜ்ஜியம் வெளியேறுவதற்கு முறையான நடவடிக்கைகளை தொடங்குகின்ற வரைவு மீது வாக்கெடுப்பு நடத்த பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தயார் செய்து வருகையில் ஸ்டர்ஜன் இவ்வாறு அறிவித்திருக்கிறார்.

பிரிட்டிஷ் அரசு அதனுடைய விட்டுக்கொடுக்காத தன்மையால் வீணாகி போவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் வெளியேறுவதை ஸ்காட்லாந்து ஏற்றுக்கொண்டாலும், ஐரோப்பிய ஒன்றிய ஒற்றைச் சந்தையிலிருந்தும் பிரிட்டன் வெளியேறுவதை ஸ்காட்லாந்து விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஸ்காட்லாந்து முதன்மை அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் (இடது), ஐக்கிய ராஜ்ஜிய பிரதமர் தெரீசா மே (வலது)

பிரிட்டிஷ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக நாடாளுமன்றம் முடிவு செய்வது ஏற்க முடியாததாக அமையும் என்று கூறி பிரெக்ஸிட் வரைவுக்கு ஆதரவு அளிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு பொறுப்பான பிரிட்டன் அமைச்சர் டேவிட் டேவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இந்த வரைவை இன்று மாலை நிறைவேற்றிவிட்டால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற முறையான செயல்முறையை செவ்வாய்க்கிழமையே பிரதமர் தெரீசா மே தொடங்குவார் என்று தெரிகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்