ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் அதிவேக சூறாவளி

மணிக்கு 263 கிலோமீட்டர் வேகத்துடன் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநில கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் பலமான சூறாவளி ஒன்று அப்பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தீவுகளில் கடும் நாசத்தை உண்டாக்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA

இன்று செவ்வாய்க்கிழமையன்று, பிற்பகல் 2 மணி அளவில் (உள்ளூர் நேரப்படி) சூறாவளிகள் பிரிவு வகைபாட்டில் மிக அதிக தாக்கம் மற்றும் பாதிப்பு ஏற்படுத்துவதில் கேட்டகிரி ஃபோர் பிரிவு வகையான டெப்பி சூறாவளி, ஆஸ்திரேலிய பெருநிலப்பரப்பை தாக்கும் என்று கணித்து 25, 000-க்கும் அதிகமான மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஹேய்ட்டியில் 400க்கும் அதிகமான உயிர்களை பலி வாங்கிய மேத்யூ சூறாவளி

பிலிப்பைன்ஸ் லுசான் தீவை நாசம் செய்த சரிகா சூறாவளி

இப்பகுதியில் உள்ள ஏறக்குறைய 23,000 வீடுகள் மின்சார இணைப்பை இழந்துள்ளன.

கடந்த 2011-ஆம் ஆண்டில் தாக்கிய யாஸி சூறாவளிக்கு பிறகு, இப்பகுதியில் வீசும் மிக மோசமான புயல் இதுவாகத்தான் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பிரிஸ்பேனுக்கு அருகேயுள்ள ஒரு பகுதியில் திரண்டிருந்த மேகங்கள்

இப்பகுதியில் வசிக்கும் ஒரு நபர் கூறுகையில், ''இடது மற்றும் வலது பக்கங்களில் இருந்து மாறி மாறிச் செல்லும் சரக்கு ரயில்களை போல் இருந்தது'' என்று இச்சூறாவளி குறித்து ஒப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்