நெடுஞ்சாலை மதுக்கடைகள் மூடல்; ஹோட்டல்கள் அதிர்ச்சி

தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் மதுக்கடைகள், பார்களை அகற்ற வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரமுள்ள மதுக்கடைகள், ஹோட்டல் பார்கள் மூடப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை Prashanth Vishwanathan/Bloomberg via Getty Images
Image caption புதுச்சேரியிலும் 160க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன

ஆனால், இந்தத் தடை உத்தரவு தங்களுடைய வர்த்தகத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என நட்சத்திர உணவகங்கள், கிளப்கள் கவலை தெரிவிக்கின்றன.

சினிமா விமர்சனம்: டோரா

இந்தியச் சாலைகளில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் மிக அதிகம் என்பதால் சாலை ஓரம் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டுமெனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டுமென உத்தரவிட்டது.

இந்த தூரத்திற்குள் உள்ள ஹோட்டல்கள், பார்களுக்கு மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் புதிதாக உரிமம் கொடுப்பதை நிறுத்த வேண்டுமென்றும் ஏற்கனவே இருக்கும் கடைகளை ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் மூட வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை மாற்ற வேண்டுமெனக் கோரியும், விளக்கம் கோரியும் 68 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டன. அவற்றை இரண்டு நாட்கள் விசாரித்த தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்ந்து வெள்ளிக்கிழமையன்று இது தொடர்பாக விரிவான விளக்கம் ஒன்றை அளித்தது.

மாதவிலக்கு காலத்தில் பெண்கள் தூய்மை இழக்கிறார்களா?

அதன்படி, இந்தத் தடை உத்தரவு மதுபானக் கடைகள் மட்டுமல்லாது ஹோட்டல்கள், பார்களுக்கும் பொருந்தும் என்று கூறியது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு தேதியில் உரிமங்களை வழங்கியிருப்பதால், அவை அக்டோபர் ஒன்றுவரை கடைகளைத் திறந்திருக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

20,000க்கு குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 500 மீட்டர் என்பது 220 மீட்டராகக் குறைக்கப்பட்டது. சாலையோரங்களில் வாகனங்கள் செல்லும்போது பார்த்தால் மதுபானக் கடைகள் தெரியும்படி இருக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.

படத்தின் காப்புரிமை NOAH SEELAM/AFP/Getty Images

ஆனால், சிக்கிம், மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், தமிழகத்தில் மதுபானக் கடைகளை அரசே நடத்துவதால் ஏப்ரல் ஒன்று முதல் கடைகளை மூட வேண்டுமென உத்தரவிட்டது. 500 மீட்டரை 100 மீட்டராகக் குறைக்க வேண்டுமென்ற தமிழகத்தின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

உள்ளூரில் மட்டுமா, உலகெங்கும் வாரிசு அரசியல்!

இதையடுத்து இன்று தமிழகத்தில் நெடுஞ்சாலையோரங்களில் உள்ள 3000க்கும் மேற்பட்ட அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டன.

சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பில் இருப்பதால், அந்தச் சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்கள் போன்றவற்றிலும் மது விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தங்கள் பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறார் தென்னிந்திய ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரெண்ட்கள் சங்க செயலாளரான நடராஜன்.

ரஜினிகாந்த் - பிரதமர் நஜிப் சந்திப்பை புகழும் மலேசிய ஊடகங்கள்

மாநிலத்தில் உள்ள பல சிறிய சாலைகள் மாநில நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பில் உள்ளன. இந்தச் சாலைகளில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தற்போது மது விற்க முடியவில்லை. இது எங்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தவிர, ஏற்கனவே திட்டமிடப்பட்ட மாநாடுகள், நிகழ்ச்சிகளில் மதுபானம் பரிமாற முடியாது. அதனால் வாடிக்கையாளர்களின் கோபத்தை சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்கிறார் நடராஜன்.

சென்னையில் பெரும்பாலான ஹோட்டல்கள் நெடுஞ்சாலைகளில்தான் அமைந்திருக்கின்றன என்கிறார் அவர்.

இது தொடர்பாக தமிழக அரசை அணுகவும் தாங்கள் திட்டமிட்டிருப்பதாக நடராஜன் கூறினார்.

இந்த உத்தரவையடுத்து புதுச்சேரியிலும் 160க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

இந்தச் செய்தியும் உங்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தலாம்:

மாதவிடாய் சோதனைக்காக 70 மாணவிகளை நிர்வாணப்படுத்திய கொடுமை

மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனையிட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்