தெர்மோகோல் திட்டத்தை வலைதளங்களில் பாராட்டுகிறார்கள்: அமைச்சர் பெருமிதம்!

தெர்மோகோலை வைகை அணையில் மிதக்கவிடும் திட்டத்திற்கு சமூக வலைதளங்களில் பாராட்டும் கிடைத்திருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கிறார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில், நீர் ஆவியாகாமல் இருப்பதற்காக நீர் மட்டத்தின் மீது தெர்மோகோல் போட்டு மூடும் திட்டத்தை செல்லூர் ராஜு துவக்கி வைத்தார். ஆனால், அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது.

இது தொடர்பான வீடியோ காட்சிகளும் புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியானபோது, சமூக வலைதளங்களில் "மீம்"களும் கடுமையான கேலிகளும் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, இது தொடர்பாக விமர்சனங்கள் இருந்தாலும் சிலர் பாராட்டுகளும் தெரிவித்திருப்பதாகக் கூறினார்.

இது ஒரு முன்னோடித் திட்டம் என்றும் எதிர்காலத்தில் நீர் ஆவியாவதைத் தடுக்க ஒரு திட்டம் தீட்டியாக வேண்டும். அப்படி ஒரு திட்டத்தை தொடங்கியதாக பாராட்டுகிறார்கள் என செல்லூர் ராஜு குறிப்பிட்டார்.

Image caption தெர்மோகோல் பட்டபாடு!

எந்த ஒரு திட்டத்தையும் அமைச்சரே திட்டமிட்டு, அதிகாரிகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வதில்லை என்றும் அதிகாரிகள்தான் திட்டங்களைத் துவக்கி வைப்பதற்காக தங்களை அழைப்பார்கள் என்றும் அப்படித்தான் இந்தத் திட்டத்தை துவக்கி வைக்க சென்றதாகவும் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

ஆனால், இது அமைச்சரின் யோசனை என்று அதிகாரிகள் தரப்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

வைகை நீரை தெர்மோகோல் அட்டையை வைத்து மூடும் முயற்சி தோல்வி !

தெர்மோகோல் நீர் ஆவியாவதைத் தடுப்பதோடு பூமியின் ஆக்க சக்தியையும் காக்குமென்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்கள் தேவைப்படுமென்றும், வெளிநாடுகளில் நீர்மட்டங்களில் பந்துகளைப் போடுவதுபோல செய்வதற்கு நிறைய செலவாகுமென்றும் செல்லூர் ராஜு குறிப்பிட்டார்.

வைகை நீரில் சிதறிய தெர்மோகோல் அட்டைகள் (புகைப்படத் தொகுப்பு)

தெர்மோகோல் விவகாரம் : அமைச்சரின் முயற்சியை கேலி செய்த ட்விட்டர்வாசிகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்