கரிகாலனாக ரஜினிகாந்த்; 'காலா' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்

படத்தின் காப்புரிமை Twitter

ரஜினிகாந்த் நடிக்கும் 'காலா' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் புகைப்படத்தை தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் வெளியிட்டுள்ளார்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 164வது திரைப்படம்தான் 'காலா'. இன்று காலை 10 மணியளவில் படத்தின் பெயரை தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் அறிவித்திருந்தார்.

படத்தின் காப்புரிமை Twitter

இந்நிலையில், படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வை, மாலை 6 மணியளவில் வெளியிடப்படும் என்று தனுஷ் தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் கூறியிருந்தார். அதன்படி, காலா திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் தயாரிப்பு நிறுவனமான வெண்டர்பாரின் அதிகாரப்பூர்வ யூ டியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள் :

முன்பு, இன்று காலை பிபிசி தமிழிடம் பேசிய அப் படத்தின் இயக்குனர் பா. ரஞ்சித், ''இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் பெயர் கரிகாலன். கரிகாலனின் சுருக்கம்தான் 'காலா' என்று தெரிவித்திருந்தார். இந்தப் பெயர் புரியவேண்டுமென்பதற்காக காலா கரிகாலன் என்று தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளது'' என்றும் ரஞ்சித் தெரிவித்திருந்தார்.

படத்தின் காப்புரிமை Twitter

இத் திரைப்படத்தின் பிற நடிகர், நடிகையர் குறித்த விவரங்கள் நாளை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள் :

பாலுறவின்போது பெண்ணின் அனுமதியில்லாமல் ஆணுறையை அகற்றுவது பாலியல் பலாத்காரமா?

பாலியல் கொடுமை தாங்க முடியாமல் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய இளம்பெண்

'இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அடுத்த இலக்கு உலகக்கோப்பை'

பிரிட்டனில் சமீபத்திய வரலாற்றில் நடைபெற்ற தாக்குதல்கள் குறித்த ஓர் பார்வை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்