மன்மோகன் சிங்: நடிகர் அனுபம் கெர் முன்னாள் பிரதமர் கதாபாத்திரத்தை ஏற்கிறார்

  • 7 ஜூன் 2017

புதிய திரைப்படம் ஒன்றில் பாலிவுட் நடிகர் அனுபம் கெர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை ANUPAM KHER

தனது டிவிட்டர் செய்தியில் இதை தெரிவித்துள்ள அனுபம் கெர், "த ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்" என்ற திரைப்படத்தில் மன்மோகன் சிங் வேடத்தில் நடிக்க ஆவலுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை இழந்த மன்மோகன் சிங் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியை, அனுபர் கெர் அடிக்கடி விமர்சித்திருக்கிறார்.

மன்மோகன் சிங்கின் முன்னாள் ஊடக ஆலோசகரான சஞ்சய் பாரு எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது.

மன்மோகன் சிங் முதன்முறை பிரதமராக இருந்த 2004 மற்றும் 2008-க்கு இடையிலான காலகட்டத்தை விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகியிருக்கிறார் சஞ்சய் பாரு. இந்தத் திரைப்படம் குறித்து முன்னாள் பிரதமர் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

"சமகால வரலாற்றை சேர்ந்தவர்கள்" கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது "மிகவும் சவாலானது" என்று எகனாமிக்ஸ் டைம்ஸிடம் பேசிய அனுபம் கெர் கூறினார்.

"ஆனால், சவால்களை எதிர்கொள்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு, என்னுடைய முதல் படமான சாரன்ஷ்-இல் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து நான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமுடன் இருக்கிறேன். எனவே, பிரதமர் மன்மோகன் சிங்கை சித்தரிக்கும் அனுபவத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்," என்று அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்