இனி சசிகலா அணியுடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை: பன்னீர் செல்வம்

  • 12 ஜூன் 2017

அதிமுகவின் இரண்டு அணிகளின் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழுவை கலைத்துவிட்டதாக அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணிக்கு தலைமை வகிக்கும், முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR/AFP/Getty Images

அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணியின் சார்பில், நேற்று ஞாயிற்றுக்கிழமை, சென்னை திருவேற்காடு அருகே நடத்தப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்றும் கட்சி வளர்ச்சிக்கான செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய ஓ.பன்னீர் செல்வம் இந்த தகவலை வெளியிட்டார்.

அதிமுக (அம்மா) அணியுடனான இணைப்பு என்கிற பேச்சுக்கே இனி இடமில்லை என அறிவித்துள்ள ஓ.பன்னீர் செல்வம், ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ள அதிமுகவை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும் தமிழகம் முழுக்க அதிமுக (அம்மா) அணியினரால் நடத்தப்படும் கூட்டங்களுக்கு, அதிமுகவின் உண்மை தொண்டர்களிடையே அதிக வரவேற்பு உள்ளதை தன்னால் உணர முடிவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

அதனால் தங்களுக்காக திரளும் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் மற்றும் பொது மக்களின் துணையோடு, தர்ம யுத்தத்தை தொடரப்போவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.

இந்த முடிவு தன்னிச்சையாக எடுத்த முடிவு இல்லை என்றும், அனைவரிடமும் கலந்து பேசி எடுக்கப்பட்ட முடிவு என்றும் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், இனியும் தங்கள் அணியோடு ஒன்று சேர முன்வராத மாற்று அணியில் உள்ள அதிமுகவினருக்கு மன்னிப்பே கிடைக்காது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இதன் காரணமாக இனி, அதிமுகவின் இரண்டு அணிகளுக்கு இடையே இணைப்பு பேச்சு வார்த்தைகள் நடைபெற வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.

பிபிசியின் பிற செய்திகள்:

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட்: 'வாழ்வா-சாவா' போட்டியில் எப்படி சாதித்தது இந்தியா?

ஃபிரெஞ்ச் ஓபனில் வரலாற்று சாதனை: யார் இந்த ரஃபேல் நடால்?

கத்தாருக்கு 5 விமானங்களில் உணவு அனுப்பியது இரான்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்