திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு: தமிழக இளைஞர்களின் புதிய முயற்சி

தமிழகத்தில் உள்ள தனியார் தொழில் நிறுவனங்களில், ஓராண்டுக்குள் திருநங்கைகளுக்கு குறைந்தது 100 வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் நடவடிக்கையை இளம் தொழிலதிபர்கள் முன்னெடுத்துள்ளனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சென்னையில் திருநங்கைகள் நடத்தும் உணவு விடுதி (காணொளி)

திருநங்கைகள் தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கை பெரிதும் உதவக்கூடும் என்பதே அவர்களது நம்பிக்கையாகவும் உள்ளது.

இந்திய அளவில் தமிழகத்தை சேர்ந்த திருநங்கைகள் பல்வேறு சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி வரும் சூழலில் கூட, அவர்களை ஒதுக்கிவைக்கும் மனப்பான்மை மக்கள் மத்தியில் உள்ளது என்கிறார் சென்னையில் உணவகத் தொடர் ஒன்றை நிறுவியுள்ள சந்தோஷ்.

குறிப்பாக தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளைப் பெறுவது அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று குறிப்பிடும் சந்தோஷ், சக இளம் தொழிலதிபர்களின் உதவியுடன் இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிப்பதாகக் கூறுகிறார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு - சந்தோஷ்

மேலும் தங்கும் வசதி பெற சிரமப்படும் திருநங்கைகளின் வசதிக்காக, லாப நோக்கமற்ற தங்கும் விடுதி ஒன்றை அமைக்கவும் திட்டம் உள்ளது என்கிறார் சந்தோஷ்.

வேலைக்கு செல்ல நினைக்கும் திருநங்கைகளுக்கு, உடன் பணிபுரியும் ஆண்களால் ஏற்படும் பிரச்சனைகளை விட பெண்களால்தான் அதிகமான தொந்தரவுகள் உண்டாகும் என்கிறார், ஒரு தனியார் நிறுவனத்தின், வாடிக்கையாளர் சேவை மையத்தில் ஆலோசகராக பணிபுரியும் திருநங்கை ஜெஸிக்கா.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு - ஜெசிகா

தமிழகத்தை பொறுத்தவரை, கிராமப்புறங்களில் வசிக்கும் திருநங்கைகளின் எண்ணிக்கையை காட்டிலும், சென்னை போன்ற பெரிய நகர்ப்புறங்களில் வாழ்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

படத்தின் காப்புரிமை Facebook: the6.in

திறமையும், தகுதியும் உள்ள திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க, தமிழகத்தில் இன்று எண்ணற்ற தனியார் நிறுவனங்கள் முன்வர தொடங்கிவிட்டதை பார்க்க முடிகிறது என்கிறார் சக்தி.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு - சக்தி

திருநங்கைகளுக்கான வேலை வாய்ப்புகளை தெரிவிக்கும் பிரத்யேக இணைய தளங்களில் கூட, அரசாங்க வேலை மற்றும் லாப நோக்கமற்ற நிறுவனங்களின் வேலைவாய்ப்பு விளம்பரங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்த நிலை தற்போது மாறியுள்ளது என்கிறார் உணவு விடுதியின் கிளை மேலாளராக பணியமர்ந்துள்ள திருநங்கை ரெஜினா.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
"திருநங்கைகளுக்கு வாய்ப்புகள் அளிக்க நாங்கள் தயார்"

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில்தான் காவல்துறை ஆய்வாளர் பதவிக்கு ஒரு திருநங்கை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அதேபோல நடனம், தொலைக்காட்சி தொகுப்பு, எழுத்து உள்ளிட்ட கலைத்துறைகளிலும் தமிழகத்தை சேர்ந்த சில திருநங்கைகள் முத்திரை பதித்துள்ளார்கள்.

இந்நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக ஒரு மாநிலத்தின் தனியார் நிறுவனங்களிலும், திருநங்கைகளுக்கு அதிக அளவிலான வேலை வாய்ப்புக்கள் உருவாக்கித் தர முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதும் இதுவே முதல்முறை.

பிற செய்திகள்:

இந்தியாவில் திருநங்கைகளுக்கான முதல் பள்ளி

கொச்சி மெட்ரோ ரயில் சேவை பணியில் திருநங்கைகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்