காஷ்மீரில் உலகின் 2-வது உயரமான கேபிள் கார் அறுந்து விழுந்து 7 பேர் பலி

படத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN

இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் குல்மார்க்கில் உள்ள உயரமான சுற்றுலா விடுதி மீது உலகின் இரண்டாவது உயரமான ''கொண்டோலா'' கேபிள் கார் நொறுங்கி விழுந்ததில் ஏழு பேர் பலியாகியுள்ளனர்.

தில்லியை சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பத்தையும் மற்றும் மூன்று உள்ளூர் பணியாளர்களின் மரணத்தையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

குல்பர்க்கில் உள்ள மிக உயரிய சிகரங்களிலிருந்து இயக்கப்படும் ஆறு இருக்கைகளை கொண்ட கேபிள் கார் வலுவான காற்று காரணமாக துண்டிக்கப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்னும், அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஆறு இருக்கைகளை கொண்ட கேபின்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தவித்து வருகின்றனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

படத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN

''தில்லியை சேர்ந்த சுற்றுலா தம்பதி மற்றும் அவர்களுடைய இரு மகள்களின் சடலங்களை மீட்டுள்ளோம். இந்த விபத்தில் பராமரிப்பு பிரிவில் வேலைப்பார்த்து வந்த மூன்று உள்ளூர்வாசிகளும் பலியாகியுள்ளனர்,'' என பாரமுல்லா மாவட்ட காவல்துறை தலைவர் இம்தியாஸ் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டி முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ட்விட்டரில் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

பலத்த காற்று வீசும்போது கேபிள் கார் சேவையை நிறுத்தி வைப்பதுதான் வழக்கமான நடைமுறை. அதைச் செய்யாதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்