”இது ஆளும் கட்சி நடத்தும் பந்த் அல்ல”
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

”இது ஆளும் கட்சி நடத்தும் பந்த் அல்ல” - நாராயணசாமி

”இது ஆளும் கட்சி நடத்தும் பந்த் அல்ல. அனைத்து கட்சிகளும் சேர்ந்து நடத்தும் முழு கடையடைப்பு என்று புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி பிபிசி தமிழிடம் தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்தால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரியில் சமீபத்தில், மாநில பாரதீய ஜனதா தலைவர் உள்பட மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமித்த ஆளுநர் கிரண்பேடி அவர்களுக்கு பதவிப் பிரமாணமும் செய்துவைத்தார்.

இதற்கு ஆளுங்கட்சி உள்பட பிற அரசியல் கட்சிகள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

இந்த விவகாரம் புதுச்சேரி அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரியின் நிர்வாகத்தில் தலையிடுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும் குற்றஞ்சாட்டி வந்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :