புர்ஹான் வானி கிராமத்தில் பதுங்கிய 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ந்தியா நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் உள்ள டிரால் நகரில், ஒரு ராணுவ நடவடிக்கையின் போது குறைந்தது மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

தீவிரவாதி புர்ஹான் வானியின் சொந்த கிராமமான சதூரா கிராமத்தில் ராணுவம், துணை ராணுவப்படை மற்றும் போலீஸ் படையின் கூட்டு குழு ஒன்று முற்றகையிட்ட போது தீவிரவாதிகள் வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டனர்.

ஜூலை 10 - ஆம் தேதி இந்து யாத்ரிகர்கள் மீது மோசமான தாக்குதலை தீவிரவாதிகள் நிகழ்த்தியதை அடுத்து தற்போது நடந்து கொண்டிருக்கும் ராணுவ நடவடிக்கையில் படைகளுக்கு கிடைத்த முதல் வெற்றி இது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

முந்தைய போலீஸ் துப்பாக்கிச்சூடுகளை ஒப்பிட்டு பார்க்கையில், டிரால் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு பெரியளவிலான உள்ளூர்வாசிகளின் போராட்டத்தை தூண்டிவிடவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

கொல்லப்பட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்த தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது ஆயுதக் குழுவை சேர்ந்தவர்கள்.

இதற்கு பழிவாங்கும் விதமாக எதிர்தாக்குதல் நடத்தப்படும் என்று அக்குழு அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த தீவிர கொள்கைகளை உடைய மசூத் அஸார் என்ற மதபோதகர் ஜெய்ஷ் அமைப்பை கண்டுபிடித்தார்.

1998 ஆம் ஆண்டு இந்திய விமானம் ஒன்று கடத்தப்பட்ட நிலையில், அதிலிருந்த பயணிகளை உயிரோடு விடுதலை செய்வதற்கு ஈடாக, மசூத் அஸார் விடுவிக்கப்பட்டார்.

ஐ.நா.வின் பாதுகாப்பு சபையில் மசூத் அஸாரை உலகளாவிய தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்ற இந்திய, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் முயற்சியை சீனா அதன் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்