100 கோடி யானைகளுக்கு சமமான பிளாஸ்டிக் கழிவுகள்

பிளாஸ்டிக் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கடந்த 65 ஆண்டுகளாக பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி கட்டுக்கடங்காமல் போயிவிட்டது. இது ஏறக்குறைய 100 கோடி யானைகளின் எடைக்கு ஒப்பானது.

இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கின் மொத்த அளவு 8.3 பில்லியன் டன்கள் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த 65 ஆண்டுகளாக பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி கட்டுக்கடங்காமல் போயிவிட்டது. இது ஏறக்குறைய 100 கோடி யானைகளின் எடைக்கு ஒப்பானது.

பிளாஸ்டிக் பொருட்கள் மிகக்குறைந்த அளவே பயன்படுத்தப்பட்டு உடனே கழிவாக வீசி எறியப்படுகிறது என்பதும், பிளாஸ்டிக்கை முழுமையாக பயன்படுத்துவதில்லை என்பதும் கவலையளிக்கக் கூடிய விசயங்கள்.

படத்தின் காப்புரிமை Christopher Furlong

மொத்த உற்பத்தியில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமான பிளாஸ்டிக் பொருட்கள் கழிவாக தூக்கி வீசப்பட்டு, நிலத்தில் கொட்டப்படுகிறது. இவை, கழிவுக் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்துவதோடு, சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது.

'பிளாஸ்டிக் கிரகமாக பூமி மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை. இந்த உலகில் வாழ விரும்பினால், பொருட்களை பயன்படுத்துவதை, அதிலும் குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு பற்றி சிந்திக்கவேண்டும்' என்று டாக்டர் ராலைண்ட் கேயேர் பிபிசியிடம் தெரிவித்தார்.

கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் சூழலியல் நிபுணர் சாண்டா பார்பராவும் அவரது சக ஊழியர்களும் பிளாஸ்டிக் பயன்பாடு பற்றி ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளனர். அதில், இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட மொத்த பிளாஸ்டிக் மற்றும் அவற்றின் பயன்பாடுகள், அதன் தாக்கங்கள் குறித்து விரிவான ஆய்வுகளின் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்