யானைகளோடு பேசுபவர் (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

யானைகள் இதயத்தில் இடம் பிடிப்பது எப்படி?

பாலூட்டிகளில் பெரிய மூளை கொண்டவை யானைகள். பெரிய இதயத்தையும் கொண்டுள்ளன. அவற்றின் மூளையில் அல்லது இதயத்தில் இடம்பிடிப்பது என்பது உங்களுடைய கையில்தான் உள்ளது.

அதனுடைய இதயத்தில் இடம்பிடித்துவிட்டால் பெரிய அளிவில் அன்பை நீங்கள் பெறலாம். ஆனால், மூளையை நீங்கள் தேர்ந்து கொண்டால் அதனுடைய கோபத்தை நீங்கள் சந்திக்க இயலாமல் போவீர்கள்.

டுருன்கால் வன விலங்கு அறக்கட்டளை நிறுவனரான ஆனந்த் ஷின்டே செய்பவற்றை சாதாரண மனிதர் யாரும் செய்ய முடியாது.

அவர் யானைகளோடு பேசுகிறார். நெருங்கிய நண்பரைபோல யானைகள் அவரோடு உரையாடுகின்றன.

நீங்கள் அவற்றை கட்டப்படுத்த நினைத்தால், அதிக எதிர்ப்புதான் கிடைக்கும். அவற்றை புரிந்துகொள்ள தொடங்கினால், கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது.

இதுதான் “ராஜா“ என்கிற குட்டி யானை. தாயிடம் இருந்து பிரிந்த நிலையில், ராஜா இந்த யானை மையத்திற்கு வந்தது.

ஆனந்த் ஷின்டேயோடு உறவாட தொடங்கியது. முதல் நாள் என்னை வெறித்து பார்த்தது. இரண்டாம் நாள் சற்று இதமாகினாலும், என்னை நெருங்கி வரவில்லை. அடுத்த நாள் தன்னுடைய தும்பிக்கையால் எனது கையை பற்றிக்கொண்டது. இதனை செய்தபோது அது அழுது கொண்டிருந்தத என்கிறார் ஆனந்த் ஷின்டே

யானைகள் மகிழ்ச்சியோடு இருக்கின்றபோது, அவை காதுகளை அசைக்கின்றன.

தாயை போல ஆனந்த் ஷின்டே அவற்றின் மீது அன்பு செலுத்துகிறார்.

உலக அளவில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு யானை இறந்து கொண்டிருக்கிறது.

இத்தகைய நிலைமை தொடர்ந்தால், பூமியில் இருந்து சீக்கரம் அவை முற்றிலும் அழிந்து விடும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்