மும்பைக்கு ஒரு புகைப்பட கலைஞரின் காதல் கடிதங்கள் (படத்தொகுப்பு)

1977 ஆம் ஆண்டு மும்பையின் மெரின் ்ஹரைவில் ஓர் ஒட்டகப் பயணம் படத்தின் காப்புரிமை Sooni Taraporevala
Image caption 1977 ஆம் ஆண்டு மும்பையின் மெரின் டிரைவில் ஓர் ஒட்டகப் பயணம்.

சோனி தாராப்பூர்வாலா ஒரு முன்னணி இந்திய புகைப்படக்கலைஞர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

‘மிசிசிப்பி மசாலா‘, ‘த நேம்ஸ்சேக்‘, மற்றும் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘சலாம் பாம்பே‘, போன்ற திரைப்படங்களுக்கு கதை எழுதி பிரபலமாக அறியப்படுகிறார். தேசிய விருது வென்ற ‘லிட்டில் ஸிஸௌ‘ என்ற திரைப்படத்தை அவர் இயக்கியும் இருக்கிறார்.

அவர் வளர்ந்த மும்பை நகரத்தை தாராப்பூர்வாலா 1977 ஆம் ஆண்டிலிருந்து புகைப்படம் எடுத்து வந்துள்ளார்.

இவருடைய புகைப்படங்கள் வித்தியாசமான மற்றும் அன்றாட நடவடிக்கைகளை பதிவு செய்து, இந்தியாவில் பன்முக தன்மையோடு விளக்கும் நகரங்களில் ஒன்றான மும்பையின் சமூக வரலாற்றிற்கு முக்கிய பங்காற்றுகின்றன.

அவருடைய புகைப்படங்கள் வகுப்பு மற்றும் சமூக எல்லைகளை கடந்து, அந்நகரத்தில் வாழும் ஒருவரின் நேசமிக்க பார்வையை காட்டுகிறது. உலகிலேயே அதிக மக்கள் வாழும் பல நகரங்களில் ஒன்றான மும்பையை அவருடைய புகைப்படங்கள் கண்டுணர உதவுகின்றன.

மும்பையில் நடத்தப்படவிருக்கும் கண்காட்சியில், காட்சிக்கு வைக்கப்படும் படங்கள், இந்நகரத்தின் விசித்திரமான மனிதர்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோரை அந்த நில அமைப்பிலேயே காட்டும் ஒரு தனிப்பட்ட ஆவணம். ஓர் எளிய பார்வையாளரின் நோக்கில் மும்பையின் பண்பாடு மற்றும் அரசியலைக் காட்டும் கண்ணாடியாக உள்ளன இப்படங்கள்.

படத்தின் காப்புரிமை Sooni Taraporevala
Image caption 1987 ஆம் ஆண்டில் ஒரு படத்தின் தொகுப்பில் நடிகர்கள் லிலிப்புட் (இடது) மற்றும் ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட்.
படத்தின் காப்புரிமை Sooni Taraporevala
படத்தின் காப்புரிமை Sooni Taraporevala
Image caption ஜெபக்கூடம், 2012
படத்தின் காப்புரிமை Sooni Taraporevala
Image caption மெரின் டிரைவில் நடைபெற்ற விமான சாகச கண்காட்சியில் பார்வையாளர்கள், 2005.
படத்தின் காப்புரிமை Sooni Taraporevala
Image caption ஜூஹூ விமான நிலையத்தில் கயிற்று கட்டிலில் அமர்ந்திருக்கும் பாதுகாப்பு பணியாளர், 1982.
படத்தின் காப்புரிமை Sooni Taraporevala
Image caption திரைப்படம் எடுக்கும் இடத்தில், 1987.
படத்தின் காப்புரிமை Sooni Taraporevala
Image caption நடிகர் சர்ஃபு மற்றும் இர்ஃபான் கான் (வலது) ஆகியோர் ‘சலாம் பாம்பே‘ படத்தின் பயிற்சியின்போது, 1987.
படத்தின் காப்புரிமை Sooni Taraporevala
Image caption இந்தியாவின் புகழ்பெற்ற கலைஞர்களில் ஒருவரான எம்எஃப் ஹுசைன், மும்பையில் உள்ள தமது வீட்டில், 2005. ஜூன் 2011 இல் அவர் இறந்தார்.
படத்தின் காப்புரிமை Sooni Taraporevala
Image caption கடற்கரையில் நிற்கும்போது பெருங்கடலை பார்வையிடும் சிறுமி.
படத்தின் காப்புரிமை Sooni Taraporevala
Image caption இந்து மத பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும்போது சிரித்து கொண்டிருக்கும் ஆண்கள், 2016.
படத்தின் காப்புரிமை Sooni Taraporevala
Image caption 1987 ஆம் ஆண்டு ஒரு படப்பிடிப்பு இடத்தில் நசருதீன் ஷா (இடது) மற்றும் ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட்.
படத்தின் காப்புரிமை Sooni Taraporevala
Image caption 1985 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின்போது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஒரு பட சுவரொட்டி.
படத்தின் காப்புரிமை Sooni Taraporevala
Image caption 1986 ஆம் ஆண்டு மெட்ரோ சினிமாவில் ஜான்பாஸ் திரைப்படத்தின் முன்னனோட்டத்திற்கு முன்பு கடற்படை இசைக்குழுவின் நிகழ்ச்சி.
படத்தின் காப்புரிமை Sooni Taraporewala
Image caption ஜான்பாஸ் பட முன்னோட்டத்திற்கு வந்திருந்த நடிகர் ராஜ் கபூரை பார்க்கும் ரசிகர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்