வாதம் விவாதம்: லட்சுமி படம் குறித்து மக்கள் இதைத்தான் சொல்கிறார்கள்!

வாதம் விவாதம் படத்தின் காப்புரிமை youtube

திருமண பந்தத்தை தாண்டிய உறவை நாடிச்செல்லும் நாயகி குறித்து சமூக வலைதளங்களில் வைராலான குறும்படம் `லட்சுமி`.

இந்த படம் வெளியானது முதல் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த திரைப்படத்தில், தனிமனித சுதந்திரம் ஊக்குவிக்கப்படுகிறதா? அல்லது, ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டுமே பொருத்திப் பார்க்கப்படுகிறதா? என்று பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் அளித்த கருத்துக்கள் இதோ.

தங்கம் சி புதியவன் இவ்வாறாக பதிவிட்டு இருக்கிறார், "மெல்லச் சிரி தாரகையே வேறொருவன் வாழ்வில் ஒளிர்ந்ததன்றி வேறொரு குற்றமும் உன் கணக்கில் சேராது. கிரகணம் நோக்கி முன்னேறு மறக்காதே கண்மனியே நீ மிளிர்ந்த இந்நாளை மனதில் கொண்டு கும்மியடி.. ஒரு வாரமா மண்டைக்குள்ள போட்டு கொடஞ்சுக்கிட்ருந்துச்சு இந்தப் படத்த பத்தி என்ன எழுதறதுனு அவர்கள் சென்னதைத் தவிர வேற எந்தக் கருத்தும் பொருத்தமா இருக்காது. நம்ம மனசுல உள்ள உணர்வுகள வெளிய அப்பட்டமா சொன்னா இந்த உலகம் வித்தியாசமா தான் பார்க்கும் ஏன்னா இந்த உலகம் வச்சுருக்கிற போலி ஒழுக்க மதிப்பீடுகள் அவ்வளவு கேவலமானது." என்று பதிவிட்டு இருக்கிறார்.

குலாம் மொய்தீன், "பெண்களை இயந்திர வாழ்க்கைக்கு உட்படுத்தாமல், அவர்களுக்குரிய ஆசாபாசங்களை வழங்குவது ஒரு ஆணின் கடமை என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதையே இக்குறும்படம் சுட்டிக்காட்டுகிறது. இக்கடமையிலிருந்து ஆண் தவறினால், தவறான வாழ்க்கை அமைய தற்போதைய காலகட்டத்தில் நிறைய வழிகள் உண்டு. எனவே, இப்படம் ஆண்களுக்கான அறிவுறையாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்." என்கிறார்.

ஆனந்தன் மகேந்திரன் இவ்வாறாக தன் கருத்தை தெரிவித்து இருக்கிறார், "கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு தன் மீது தனிப்பட்ட அக்கறை இல்லை என்பதற்காக யாரோ ஒரு வழிப்போக்கனிடம் உறவு வைத்துக் கொள்வது என்பது மிகவும் கேவலமான சமூக அவலம் தனக்கு ஒரு பையன் இருக்கின்றான் என்பதை மறந்து விட்டு செய்யும் மிகப்பெரும் தவறு இதே மாதிரி ஒரு ஆங்கில படம் addiction என்று நினைக்கிறேன் அந்த கதாநாயகி ஒரு முறை சஞ்சலப்பட்டதின் விளைவு பல பேர் அவளுடன் மிரட்டி உறவு வைத்துக் கொள்வார்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யவும் வாய்ப்பு உள்ளது இந்த மாதிரி ஆட்களை நம்பி சென்றால்."

பவதரஹன் சின்னராசா, "எனது பார்வையில் லக்ஷ்மி .... அவளுக்கும் அவளின் கணவன் எனப்படுபவருக்கும் என்ன உளத்தாக்கமோ அறியவில்லை .பேசி தீர்க்கும் அளவிற்கு அவர்களுக்கு புரிந்துணர்வு இருந்திருந்தாலும் இந்த அளவு அவர்கள் போயிருக்க வேண்டியதும் இல்லை.

எல்லோரும் கூறுவது போல நடுத்தர வர்க்கம் என்ன செய்வது என்பதெல்லாம் இயலாமையின் வெளிப்பாடு .இப்படத்தில் அவளுடைய காட்சி கணவனுக்கு மாற்றப்பட்டிருந்தால் இவ்வளவு தூரம் நம்மவர் பேசியிருப்பாரோ என்னவோ ? பெண்கள் நாட்டின் கண்கள் என்பது பல பெண்களுக்கு வீட்டின் விளக்கு அணைந்த அறையிலே விழி திறக்க படுவதும் உண்மையே.

லக்ஷ்மியும் பயணப்பட வாகனம் இல்லாத போது கணவனுக்கு தொலை பேசி அழைப்பு விடுத்தும் அவன் அடுத்த நாளைக்குரிய உணவை கேட்கும் போது அவளுக்கும் எரிச்சல் தொற்றிகொள்ளத்தான் செய்கிறது . தெரியாத கதிருடன் எப்படி போகலாம் என்பதை விட தெரிந்த கணவனையே நினைத்து கோவம் வருகிறது எனக்கு .அவளும் அவனுடன் கலவி கொள்ளவும் போகவில்லை .காரணம் முன் கூட்டியே கணவன் , குழந்தை இருப்பதை மறைமுகமாக சொல்லிவிடுகிறாள்.

கதிரும் அவளை ரசிப்பில் ஊற வைத்து அவளும் அதன் நீழ்ச்சியில் கலவி கொள்கிறாள் மறு நாள் இனி வேண்டாம் என்றே பேருந்தில் பயணப்படுகிறாள் ! இதில் தெரியாத ஒருவனுடன் ......என்ற கேள்வி எல்லாம் என்பது , கணவனின் பெயர் தெரியாத ஒரு பெண்ணின் அழைப்பையே நினைத்து பார்க்க தோணுகிறது . இன்னொருவனுடன் தொடர்பு என்பது உரியவனின் தொடர்பு சீரற்று இருப்பதுவும் உண்மையே.

எம் சமுதாயத்தில் பெண்களுக்கும் இடம் கொடுப்போம் என்பது என்னால் ஏற்க முடியாத ஒன்று காரணம் இடம் கொடுக்க நாம் யாரும் ஒன்றும் அல்ல .லட்சுமி செய்தது சரியா தவறா என்ற வாதத்தை விடுத்து ..லஷ்மிக்கான சமுதாய பூட்டையும் அவளின் கணவனின் பிழையான போக்கையும் எப்படி துடைக்க போகின்றோம் என்பதே நிதர்சனம் !" என்று தன் கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.

மதன் சிவாவின் கருத்து இது :"ஆண்கள் மட்டும் என்ன செய்தாலும் பரவாயில்லை..... ஒழுக்கம் இரு பக்கமும் அவசியம் தான்.... பெண்ணின் உணர்வு மிக அருமையாக வொளிகாட்டபட்டுள்ளது.... புரிதலின் அவசியத்தை எடுத்துகாட்டிய படம்...."

நடராஜ் பார்த்திபன் இவ்வாறாக பதிவிட்டு இருக்கிறார், " இன்னொரு பொண்ணு கூட தொடர்புல இருந்த அவன கண்ணுக்கு தெரியல.. அவள் இன்னொருத்தன் கூட போனத தப்புன்னு சொல்லறாங்க.. அவங்ககிட்ட ஒன்னு கேட்டுக்கறேன்.. தப்புன்னு சொன்னா இரண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு.. கடைசியா ஒன்னு... பொம்பளைங்க என்ன தேவைப்படும் போது உங்க ஆசைய மட்டும் தீர்த்துகற கருவியா...?"

சாதிக்கின் கருத்து, "மனைவி செய்தாலும் கணவன் செய்தாலும் தப்பு தப்பு தான் கணவன் தவறு செய்தால் மனைவி திருத்த வேண்டும் மனைவி நீ தவறு செய்வதால் நானும் செய்வேன் என்று செய்தால் எப்படி குடும்பம் ஓடும் கணவனும் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்ய வேண்டும் அவளை வேலை செய்யும் இயந்திரமாகவும் காம பசிக்கு உணவாக மட்டும் எடுத்துக்கொள்ள கூடாது அவளை இன்ப படுத்த அன்போடு அரவனைத்தால் அதுவே சிறப்பான வாழ்க்கை."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்