“சாதி, சமய பேதங்களை முன்னிறுத்தி அரசியல் ஆதாயம் கண்டிக்கத்தக்கது”

ராகுலின் சோமநாதர் ஆலய விஜயத்தால் எழுந்த சர்ச்சையில் 'மோதி உண்மையான இந்து இல்லை' என்று காங்., விமர்சனம் செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த விமர்சனம், குஜராத் தேர்தலுக்காக இந்துக்களின் வாக்குகளைக் கவரும் காங்கிரஸின் முயற்சி என்ற விமர்சனம் சரியா?

பாஜகவை வீழ்த்த அவர்களின் வியூகங்களையே காங்., கையாள்கிறதா? என்று நேயர்களிடம் கருத்து கேட்டிருந்தோம்.

வாதம் விவாதம் பகுதியில் நேயர்கள் பதிவிட்டிருந்த கருத்துக்களை இதில் தொகுத்து வழங்குகின்றோம்.

நம்முடைய ஃபேஸ்புக் நேயர் மனோகர் கீ மனோகர் “சரியோ தவறோ. ஆனால் ஒன்று நிச்சயம். நாடு மத வெறியர்களால் துண்டாடப்படுகிறது. மதக் கலவர பூமியாக சீரழிவை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. நாட்டில் உள்ள அபாயகரமான ஏழை-பணக்காரர்கள் வித்தியாசம் மத துவேஷங்களை தூண்டுவதால் மறைக்கப்படுகிறது‘ என்று தெரிவித்துள்ளார்.

சக்தி சரவணன் என்ற நேயரோ, “ஆதிசங்கரர், ஆங்கிலேயருக்குப் பின்பே சைவம், வைணவம், கெளமாரம், கணபதியம், செளரம், சாக்தம் போன்ற வெவ்வேறு சமயங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு (பல பிராந்திய வழிபாட்டு முறைகளைத் திரித்து) இந்துத்துவ கோட்பாடு தொடங்கியது என்பதன் அடிப்படையில் யாரும் இங்கே உண்மையான இந்துக்கள் என்று உரிமைக் கோரிட முடியாது. சாதி சமயப் பிரிவினை பேதங்களை முன்னிறுத்தி எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தல் அல்லது அரசியல் ஆதாயம் தேட நினைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது, மேலும் இது இந்திய அரசியல் சாசனத்திற்கும் எதிரானது‘ என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

தான் ஆரம்பித்த மத அரசியலை அடுத்தவர்கள் செய்ய ஆரம்பித்தால் என்னவாகும் என்பது இதன் மூலம் பாஜகவுக்கு இப்போது புரியும்!! என்று பபுலிவாலாம் பாஷா பாஷா கருத்துப் பதிவிட்டுள்ளார்.

சிவகுமார் சின்னப்பன் என்ற நேயர் ஹிமாச்சலபிரதேசம் மற்றும் குஜராத்தில் பாஜக 100 சதவீதம் வெற்றியடையும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

சூனா பானா என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பதிவிடுபவர், தேர்தல் வெற்றிக்காக பாஜக எந்த அளவிற்கு வேண்டும் என்றாலும் கீழிறங்கும். சந்தர்ப்பம் பார்த்து மத உணர்வுகளை தூண்டி விட்டு ஆதாயம் அடையும் உத்தியை மற்ற கட்சிகள் நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெய் குமார் என்ற நேயர் “அடப் பாவிகளா நாடு முன்னேறுமா? நீ உழைத்தால் தான் சோறு. தனிமனித தன்னிறைவு எதிர்பார்க்காத சக்தியை தரும். இயலாதவர்களை மட்டும் அரசு காக்க வேண்டும்‘ என்கிறார்.

“முள்ளை முள்ளாலதானே எடுக்கனும்‘ என்று கூறியுள்ள ஹாஜா முகமத், “பிரித்தாளும் புத்தியை மோடிதானே புதிய இந்தியாவில் கற்றுகொடுத்தார். காங்கிரஸ் எடுத்த ஆயுதம் சரிதான்‘ என்கிறார்.

பாஜகவை வீழ்த்த அவர்களின் வழியை கையாளுகிறது. இதில் வெற்றியும் பெறும் என்ற கருத்து சிலுவை சிலுவை என்ற நேயருடைதாகும்.

பிற செய்திகள்:

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :