ரஜினிகாந்தின் '2.0' பட வெளியீடு தள்ளிப்போகிறது

ரஜினிகாந்தின் '2.0' படத்தின் காப்புரிமை AFP

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் 2.0 படம் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என அந்தப் படத்தை தயாரிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக இந்தப் படம் 2018 ஜனவரியில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

மிகப் பெரிய பொருட்செலவில் தயாராகும் இந்தப் படம் ஒரு அறிவியல் - புனைகதை எனக் கூறியிருக்கும் தயாரிப்பாளர் தரப்பு, படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருவதாகவும் இப்போது குறிப்பிட்டுள்ள தேதியில் படம் நிச்சயம் வெளியாகுமென்றும் அறிவித்துள்ளது.

2.0 படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சனும் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள முப்பரிமாணப் படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் 2.0 படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்தப் படத்தில் தனது பகுதிகளை முடித்துக்கொடுத்திருக்கும் ரஜினிகாந்த், தற்போது ரஞ்சித் இயக்கும் காலா படத்தில் நடித்துவருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்