முத்தலாக் முறை : உடனடி விவாகரத்திற்கு மூன்றாண்டு சிறை!

முத்தலாக் முறை சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது படத்தின் காப்புரிமை Getty Images

முத்தலாக் முறையில் "உடனடி விவாகரத்து" வழங்கும் ஆண்களுக்கு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது.

இஸ்லாத்தின் பாரம்பரிய முறைப்படி, ஆண்கள் தங்கள் மனைவியிடம் மின்னஞ்சல், வாய்மொழி அல்லது எந்த வடிவத்திலும் மூன்று முறை "தலாக்" கூறினால் விவாகரத்து ஆகிவிட்டது என அர்த்தம்.

தலாக் கூறி விவாகரத்து பெறுவது அரசியலமைப்பிற்கு எதிரானது என இந்திய உச்சநீதிமன்றம் உத்தரிவிட்டும், பல இடங்களில் இது தொடர்வதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

தற்போது முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்ட வரைவு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் உள்ளது.

திருமண மசோதாவில், முஸ்லிம் பெண்கள் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் முன்வரைவு, ஆலோசனைகளுக்காக மாநில அரசாங்கங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த முன்வரைவு, உச்சநீதிமன்ற உத்தரவிற்கு இணங்க 'முத்தலாக்' விவாகரத்து முறையை வெளிப்படையாக தடை செய்யும். மேலும் பெண்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாழ்வாதாரத்திற்கான சட்ட விதிமுறைகளுக்கும் இது வழிவகை செய்யும் என பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

"கணவன் வீட்டை விட்டு வெளியேற சொன்னால் மனைவிக்கு சட்டப் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்கான" விதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போதைய சட்ட முன்வரைவின் படி, இது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஜாமினில் வெளிவர முடியாது.

எழுத்துப்பூர்வமாகவோ அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ எந்த விதத்திலும் தலாக் கூறுவதை இது தடை செய்யும்.

படத்தின் காப்புரிமை Getty Images

டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அமர்வுகளில் இது தொடர்பான சட்டம் பரீசிலிக்கப்படும் என்று இந்திய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாத்தின் புனித நூலான குர்ஆனில் எந்த அடிப்படையிலும் இல்லாத முத்தலாக் முறை பின்பற்றப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்து வந்தது.

அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இருக்கும் இந்த பாரம்பரிய முறைக்கு தடை கோரி ஐந்து பெண்கள் தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் இதற்கு தடை விதித்தது.

முத்தலாக் முறை "இஸ்லாத்திற்கு எதிரானது" என மூன்று அமர்வு கொண்ட நீதிபதிகளில், இருவர் மனுதாரர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :