டெல்லி மற்றும் வட மாநிலங்களில் நில நடுக்கம்

டெல்லி படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியத் தலைநகர் டெல்லியிலும் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் இன்று (புதன்கிழமை) இரவு நில அதிர்வு உணரப்பட்டது.

உத்தராகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட நில நடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டது.

இந்த நில நடுக்கம் 5.5 ஆகப் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இரவு 8.45 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30 கிமீ ஆழத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது.

இமயமலை பகுதியான உத்தராகண்ட், நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பிராந்தியமாக கருதப்படுகிறது என பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நிலநடுக்கத்தின் போது உங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்