குஜராத் தேர்தல்: இதுவரை நடந்த 10 முக்கிய நிகழ்வுகள்

பா.ஜ.க

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது. இந்நிலையில் தேர்தலின் போதும், பிரசாரத்தின் போது நடந்த முக்கிய 10 நிகழ்வுகள் இங்கே.

 • இளம் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, ஓ.பி.சி சமூகத்தின் தலைவர் அல்பேஷ் தாக்கூர் ஆகியோர் பா.ஜ.கவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்தனர்.
 • சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூரத் எம்பிராய்டரி கலைஞர்கள் மற்றும் வியாபாரிகள் பா.ஜ.க.வுக்கு எதிராகத் திரும்பினர்.
 • பிரசாரத்தின் போது குஜராத் அரசியலுக்கு புதியவரான ஹர்திக் படேலுக்கு கூடிய கூட்டம், பிரதமர் மோதிக்கு கூடவில்லை.
 • குஜராத் ஒரு வளர்ச்சியடைந்த மாநிலமாக கருதப்படும் நிலையில், ''பைத்தியகரத்தானமான வளர்ச்சி'' என்ற ஹாஷ்டாகை குஜராத் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் டிரண்ட் ஆக்கினர்.
 • 24 வயதான ஹர்திக் பட்டேல், குஜராத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோதியின் முக்கிய எதிரியாக வளர்ந்திருப்பதாக கருதப்பட்டார்.
படத்தின் காப்புரிமை Getty Images
 • தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோதி மற்றும் பா.ஜ.க தலைவர்கள் அடிக்கடி பாகிஸ்தான் பெயரை பயன்படுத்தினர். காங்கிரஸ் எல்லை தாண்டிய நாட்டில் இருந்து உதவிபெறுவதாக மோதி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். தேர்தல் பிரசாரத்திற்காக எங்களை இழுக்காதீர்கள் என மோதிக்கு பாகிஸ்தான் பதிலளித்தது.
 • குஜராத் சோமநாதர் ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கான பிற மதத்தினருக்கான பதிவேட்டில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பெயர் எழுதப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.
 • ஹர்திக் பட்டேல், அடையாளம் தெரியாத ஒரு பெண்ணோடு, ஒரு அறையில் உள்ளது போன்ற ஒரு காணொளி வெளியானது. "காணொளியில் இருப்பது நானில்லை. ஆனால், பாஜக அந்த பெண்ணை தவறான அரசியலுக்காக பயன்படுத்துகிறது" என ஹர்திக் பட்டேல் கூறினார்.
 • குஜராத் சட்டமன்றத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவுக்கு முந்தைய நாள் பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
 • வாக்குப் பதிவுக்கு பிந்தைய கணிப்புகளில் பாஜக முன்னிலை வகித்தது.
 • குஜராத் தேர்தலையும், மோதி அரசின் பொருளாதார சீர்திருத்தங்களை சம்மந்தப்படுத்தி பார்க்கிறது சீனா. இதனால், பா.ஜ.கவுக்கு வெற்றி கிடைக்குமா? அல்லது தோல்வி கிடைக்குமா? என்ற தேர்தல் முடிவுக்காக சீனா ஆர்வத்துடன் காத்திருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்