நாளிதழ்களில் இன்றைய முக்கிய செய்திகள்

படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (செவ்வாய்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பாஜக பெற்ற வெற்றி, ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் ஆகியவை இன்றைய நாளிதழ்களில் முக்கிய இடம் பிடித்துள்ளன.

தினமலர்

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாக வாய்ப்பிருப்பதாகவும், ஒரே நாளில் 100 கோடி ரூபாய் அளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளதாகவும் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், கொங்கு மண்டலத்தை குறிவைத்து வட மாநில கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதி மக்கள் நிம்மதியின்றி தவித்து வருவதாக கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை M. K. Stalin

தினமணி

தேர்தல் களத்தில் வெற்றியை உறுதி செய்வது எப்படி என்கிற வித்தையை நரேந்திர மோதி, அமித் ஷா தலைமையிலான பாஜக கற்றுத் தேர்ந்திருக்கிறது என்பதை குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்றும், ராகுல் காந்தியும், காங்கிரஸும் படிக்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன என்றும் 'எதிர்பாராததல்ல' என்ற தலைப்பில் தினமணி தலையங்கம் வெளியிட்டுள்ளது.

தினகரன்

ஓகி புயல் சேத நிவாரணமாக தமிழகத்துக்கு இரண்டாவது தவணை தொகையாக 561 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது பற்றியும், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட பிரதமர் மோதி இன்று தமிழகம் வருவது பற்றியும் தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் முந்துவதாகவும், 2 ஆம் இடத்துக்கு மதுசூதனன் மற்றும் டிடிவி தினகரனுக்கு இடையே போட்டியிருப்பதாகவும் கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

தினத்தந்தி

ஆர்.கே.நகர் தொகுதியில் வீடுகளுக்கு முன்பு இடம்பெற்றுள்ள ரகசிய குறியீடுகள் பணப்பட்டுவாடா முடிந்துவிட்டதற்கான அடையாளம்தான் என்றுகூறி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆந்திராவில் உள்ள பெண்கள் போலீஸை தயக்கமின்றி நாடும் நோக்கத்தில் விழிப்புணர்பு ஏற்படுத்தும் வகையில் அம்மாநில காவல்துறையை சேர்ந்த நான்கு பெண்கள் 1,250 கி.மீ தூரத்தை சைக்கிளிலேயே வலம் வந்திருப்பது குறித்தம் தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்