நாளிதழ்களில் இன்று:ஜெயலலிதா இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி:

படத்தின் காப்புரிமை Getty Images

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லமான வேதா நிலையத்தை, நினைவிடமாக மாற்றுவதற்காக சனிக்கிழமை அதிகாரிகள் ஆய்வு செய்த நிகழ்வை பிரதான செய்தியாக தினத்தந்தி நாளிதழ் வெளியிட்டுள்ளது. காலை 7.30 மணிக்கு தொடங்கிய ஆய்வு பணி 1.50 -க்கு நிறைவடைந்ததென்றும், ஆய்வின் அடிப்படையில் வேதா நிலையத்தின் பணமதிப்பு முடிவு செய்யப்படும் என்றும் அந்த செய்தி விவரிக்கிறது.

தினமணி:

படத்தின் காப்புரிமை Getty Images

இலாகா ஒதுக்கீட்டில் குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் அதிருப்தி என்று தினமணி நாளிதழ் தன் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. "இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் 3 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும், இல்லையெனில் அமைச்சரவையில் இருந்து விலகுவது தொடர்பான முடிவை எடுக்க வேண்டியிருக்கும் என்று முதல்வர் ரூபானிக்கு நிதின் படேல் கெடு விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால், இந்தத் தகவல் உண்மையா? என்பது தெரியவில்லை" என்கிறது அந்தச் செய்தி.

தி இந்து (தமிழ்):

படத்தின் காப்புரிமை Getty Images

தி இந்து தமிழ் நாளிதழ் கடந்த ஓராண்டாக தமிழகத்தில் நடந்த நிகழ்வுகளை தொகுத்து ஆசிரியர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. "சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டதால், உடுமலைப்பேட்டை வீதியில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட சங்கர் வழக்கில், பிரதான குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது முதல் ஒகி புயல் துயரம், தினகரன் எழுச்சி வரை" என பல தகவல்கள் அப்பகத்தில் இடம்பிடித்துள்ளது.

தி இந்து (ஆங்கிலம்):

படத்தின் காப்புரிமை Getty Images

பாலஸ்தீன் அரசாங்கம் பாகிஸ்தானுக்கான தனது தூதரை திரும்ப அழைக்க முடிவு குறித்த செய்தி தி இந்து ஆங்கில நாளிதழில் பிரதான இடத்தை பிடித்துள்ளது. லக்‌ஷர் இ தொய்பா தலைவர் ஹஃபீஸ் சையத் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் இந்த தூதரும் கலந்துக் கொண்டதற்கு இந்தியா தன் எதிர்பௌ பதிவு செய்தது. இதனை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த செய்தி விவரிக்கிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா:

படத்தின் காப்புரிமை Getty Images

அரசியல் குறித்து தனது முடிவை இன்று அறிவிப்பதாக ரஜினிகாந்த் கூறி இருந்தார். அதுதொடர்பான செய்தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினியின் நண்பர்கள், அவரை இயக்கிய இயக்குநர்கள் என பலரிடம் பேசி அவர்களின் கருத்தை பதிவு செய்துள்ளது.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :