நாளிதழ்களில் இன்று: "அவர்கள் கேட்க நானும் ஏதாவது சொல்லிவிடுகிறேன்" - ரஜினிகாந்த்

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (திங்கட்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

பெரும்பாலும் அனைத்து நாளிதழ்களிலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த செய்திதான் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது

தினத்தந்தி:

படத்தின் காப்புரிமை Getty Images

தினத் தந்தி முதல் பக்கத்தில் ரஜினியின் அரசியல் பிரவேச செய்தியை பிரசுரித்துள்ளது. ரஜினி, "பெரிய ஜாம்பாவான்கள் எல்லாம் மீடியாவைப் பார்த்து திணறுகிறார்கள்; பயப்படுகிறார்கள். நான் இன்னும் குழந்தை. எனக்கு எப்படி இருக்கும். காரில் போகும் போது, வீட்டில் இருந்துவரும் போதெல்லாம் `டக்`, `டக்` என்று மைக்கை நீட்டி ஏதாவது கேட்டுவிடுகிறார்கள். தானும் ஏதாவது சொல்ல உடனே அதுவிவாதம் ஆகிவிடுகிறது" என்று கூறியதாக செய்தி பிரசுரித்துள்ளது.

தினமணி:

படத்தின் காப்புரிமை Getty Images

குஜராத் துணை முதல்வர் நிதின் பட்டேலுக்கு நிதி இலாகா ஒதுக்கப்பட்ட செய்தி தினமணி நாளிதழில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. குஜராத்தில் முந்தைய பாஜக அமைச்சரவையில் துணை முதல்வர் நிதின் படேலுக்கு நிதி, நகர்ப்புற வளர்ச்சி ஆகிய இலாகாக்கள் வழங்கப்பட்டு இருந்தன. தற்போதைய அமைச்சரவையில் அவருக்கு அளிக்கப்படவில்லை. நிதி இலாகாவை அமைச்சர் செளரப் படேலுக்கு முதல்வர் விஜய் ரூபானி ஒதுக்கினார். நகர்புற வளர்ச்சித் துறை இலாகாவை தன்னிடமே வைத்துக் கொண்டார். இதனால் அதிருப்தியடைந்த நிதின் படேல், தனது அலுவலகத்துக்குச் சென்று பொறுப்பேற்காமல் இருந்தார். இந்த நிலையில் அவருக்கு நிதி இலாகா ஒதுக்கப்பட்டதை அடுத்து அவர் சமாதானம் அடைந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.

தி இந்து (தமிழ்):

தமிழ் இந்து நாளிதழ், தன் ஆசிரியர் பக்கத்தில் இந்த ஆண்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை தொகுத்து அதில் சம்பந்தப்பட்ட மனிதர்கள் குறித்த குறிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. எழுத்தாளர் அசோகமித்ரன், இயக்குநர் ராஜமெளலி என பல்வேறு துறை சம்பந்தப்பட்ட நிகழ்வுகளும் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளது.

தினமலர்:

படத்தின் காப்புரிமை Dinamalar

டைம்ஸ் ஆஃப் இந்தியா:

கடந்த 2017- ஆம் ஆண்டில் மட்டும் 1,600 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டு இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 2008 - 2017 காலக்கட்டத்தில் மட்டும் 6,658 குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தி விவரிக்கிறது.

தி இந்து (ஆங்கிலம்):

ஸ்ரீநகர் லெத்போராவில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 5 சிஆர்பிஎஃப் வீரர்களும் 2 லக்‌ஷர் இ தொய்பா பயங்கரவாதிகளும் ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்ட செய்தியை பிரதான இடத்தில் வெளியிட்டு இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்