நாளிதழ்களில் இன்று: மாலத்தீவு வரை சென்று தேடிய மீனவர்கள்

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (புதன்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி

படத்தின் காப்புரிமை Getty Images

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்து இயக்கப்பட இருக்கும் செய்தி தினத்தந்தி நாளிதழில் முதல் பக்கத்தில் இடம் பிடித்துள்ளது. "பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 11 -ம் தேதி முதல் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சுமார் 12 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் 5 இடங்களில் இருந்து புறப்பட்டு செல்லும்." என்கிறது அந்த செய்தி மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதியை ரஜினிகாந்த் சந்தித்த செய்தியும் முதல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

தினமணி

படத்தின் காப்புரிமை Getty Images

தினமணி நாளிதழ் `அதிருப்தியில் கிராமங்கள்` என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அந்த தலையங்கம், குஜராத் மற்றும் உத்தர பிரதேசத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை மேற்கோள் காட்டி, கிராமபுறம் சந்திக்கும் பிரச்சனைகளையும், அதற்கான தீர்வுகளையும் எழுதி இருக்கிறது. `நிலையான ஏற்றுமதி - இறக்குமதிக் கொள்கை, ஊரகப்புற குடியிருப்பு மற்றும் பாசனத் திட்டங்களுக்கு முன்னுரிமை, ஊரகப்புற சாலைகள் அமைப்பதில் கூடுதல் முதலீடு போன்றவை வேலைவாய்ப்புகளை அதிகரித்து, ஊரகப்புற தொழிலாளர்களின் வருமானத்தையும் அதிகரிக்கச் செய்யும்." என்கிறது அந்த தலையங்கம்.

தி இந்து (தமிழ்)

படத்தின் காப்புரிமை தி இந்து

டைம்ஸ் ஆஃப் இந்தியா:

படத்தின் காப்புரிமை Getty Images

கொசுவால் பரவும் நோய் தமிழகத்தில் அதிகரித்து வருவதாக சுகாதார துறையின் தரவுகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு இருக்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ். 2016 ஆம் ஆண்டை காட்டிலும் 2017 ஆம் ஆண்டில் மலேரியா நோய் தாக்குதல் 18 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அச்செய்தி குறிப்பிடுகிறது. அதாவது 2016 ஆம் ஆண்டில் மலேரியா நோயால் 4341 பாதிக்கப்பட்டு இருந்தார்கள் என்றும், 2017-ல் இது 5142 ஆக உயர்ந்தது என்று கூறுகிறது அந்த செய்தி. அதுபோல 2,531 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள் என்றும், 2017 ல் இந்த எண்ணிக்கை 23,035 ஆக உயர்ந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

தி இந்து (ஆங்கிலம்)

படத்தின் காப்புரிமை Getty Images

ஒகி புயலில் காணாமல் போன மீனவர்களை தேட, மீனவ மக்கள் வசிக்காத தீவுகளுக்கு சென்றுள்ள செய்தி தி இந்து நாளிதழில் பிரதான இடத்தை பிடித்துள்ளது. மாலத்தீவு நாட்டில் உள்ள மக்கள் வசிக்காத தீவுகளில், காணாமல் போன கன்னியாகுமரி மீனவர்களை தேட அனுமதிக்குமாறு அங்குள்ள மீனவர்கள் மூலமாக அந்நாட்டு அரசை கோரி இருக்கிறார்கள். அதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்ததை அடுத்து கன்னியாகுமரி மீனவர்கள் மாலத் தீவில் தேடுதல் பணியை மேற்கொண்டார்கள் என்று விவரிக்கிறது அந்த செய்தி.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :