பெங்களூரு மதுபான விடுதியில் தீ விபத்து: ஐவர் பலி

பெங்களூர் தீ விபத்து: ஐந்து பேர் பலி படத்தின் காப்புரிமை Banglore police

தெற்கு பெங்களூருவில் உள்ள கைலாஷ் பார் என்னும், மது விடுதியில், இன்று (திங்கள்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில், அங்கு பணியாற்றிய ஐந்து பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த ஐந்து பேரும் விபத்தின்போது தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர்.

விபத்திற்கான காரணம் என்ன என்பதை கண்டறிய விசாரணை நடந்து வருவதாக, அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களில் மும்பையில் நடந்த இருவேறு தீவிபத்துகளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, இந்த விபத்தும் நடந்துள்ளது.

மது அருந்தும் இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறைபாடு இருந்துள்ளதா என்பதை, தடயவியல் குழுவும், தீயணைப்புத்துறையும் இணைந்து விசாரித்து வருவதாக பெங்களூரு இணை ஆணையர் எம்.என் அனுசெத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகராக பெங்களூர் அறியப்படுகிறது. மேலும், கடந்த பத்து ஆண்டுகளில், அங்கு அதிவேகத்தில் நடந்த கட்டுமானப் பணிகளால், பல கட்டடங்கள் உருவாகியதையும் பார்க்க முடிகிறது.

ஆனால், வணிக ரீதியான கட்டடங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்போதும் சரியாக பின்பற்றப்படுவதில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்