“உணர்வுகள் நசுக்கப்படும்போது தமிழன் சாதி,மத உணர்வுகளை தாண்டி ஒன்றிணைவான்”

ஜல்லிக்கட்டு படத்தின் காப்புரிமை ARUN SANKAR/AFP/GETTY IMAGES

எதிர்பாராத எழுச்சியோடு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போரட்டம் நடைபெற்று ஓராண்டு முடிகிறது.

இந்த எழுச்சி, பிற சமூகப் பிரச்சனைகளுக்கும் மக்கள் ஒன்றுகூடிப் போராடுவதற்கான உத்வேகத்தை அளித்ததா? ஒரு பிரச்சனைக்கான உணர்ச்சியாக வடிந்துபோனதா? என்று கேள்வி கேட்டு பிபிசி தமிழின் ‘வாதம் விவாதம்‘ பகுதியில் வழங்கியிருந்தோம்.

இதற்கு நேயர்கள் சமூக வலைதளமான ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பதிவிட்ட கருத்துக்களை உங்களுக்கு தொகுத்து வழங்குகின்றோம்.

ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ள சிலுவைமுத்து வடாலி என்கிற நேயர், “ஜல்லிகட்டுப் போராட்டம் உண்மையாகவே ஜல்லிக்கட்டுக்காகவே இல்லை. இப்போது இருக்கிற அரசு கட்சிகளுக்குப் பதிலாக ஒரு மாற்று வேண்டும் என்ற மக்களின் ஆதங்கமே இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஆனால் அதை தங்கள் ஆதாயத்துக்காக சினிமாக்காரர்களும் சில கட்சிகளும் ஊடுருவியதன் காரணமாக மக்களின் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது” என்ற கருத்தை பதிவிட்டுள்ளார்.

ஃபெலிசிட்டா ராணி அமல்ராஜ் என்ற நேயர், “இதற்கான விடை கேள்வியிலேயே உள்ளது. சமூக உள்கட்டுமானங்களை சீரழித்து கொண்டிருக்கிற அரசில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இளைஞர்கள் தயாராக இல்லை. அநீதிகள் எதையும் நிறுத்துவதற்கு அவர்கள் தயாராக இல்லை. ஜல்லிக்கட்டு பிரச்சனையில் அவர்கள் உணர்ச்சியால் உந்தப்பட்டிருந்தனர். அதுவும் அந்த ஒருமுறைதான்” என்று எழுதியுள்ளார்.

ஷேக் ஜமுனா கான் என்ற நேயர், “ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தமிழகத்தில் அனைத்து மக்களும் இனணந்து போராடினார். ஆனால் மற்ற எவ்வளவு பிரச்சனைகள் தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகின்றன. அவைகளை மக்கள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். உதாரணம் விவசாயிகள் பிரச்சனைக்கு விவசாயிகள் மட்டுமே போராடினார்” என்கிறார்.

டிவிட்டர் பக்கத்தில் தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ள ஆர். எஸ். அருண், “வலிமையுடைய அரசையும் எதிர்க்க முன் வர வேண்டும்” என்ற கருத்தை பதிவி்ட்டுள்ளார்.

ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள புலிவலம் பாஷா என்பவர், “மதம் சாதி என்ற வேறுபாடு இல்லாமல் தமிழர்கள் என்ற இனம் ஒற்றுமையோடு நடத்திய போராட்டம் இந்த ஜல்லிக்கட்டு போராட்டம். மீண்டும் இப்படிப்பட்ட போராட்டம் நடக்க வேண்டுமா வேண்டாமா என்பதை மக்கள் தீர்மானிக்க மாட்டார்கள் அரசின் செயல்பாடு தான் தீர்மானிக்கும்!! என்று கூறியுள்ளார்.

“ஜல்லிக்கட்டு போராட்டம் தந்த செய்தி, தமிழன் உணர்வுகள் நசுக்கப்படும் போது தங்களை சுற்றியுள்ள சாதி,மத உணர்வுகளை தாண்டி ஒன்றிணைவார்கள் என்பதே. மீண்டும் ஒரு நிகழ்வு தமிழர்களை பாதிக்கும்போது அது வெளிப்படவே செய்யும்” என்ற கருத்தை அழுத்தமாக கூறியிருக்கிறார் காலிமுல்லா முஸ்தாக்.

படத்தின் காப்புரிமை Getty Images

பிற பிரச்சனைகளுக்கும் மக்கள் ஒன்று கூட ஜல்லிக்கட்டு போராட்டம் உத்வேகம் அளித்து உள்ளது என்பது தான் உண்மை. ஆனால் மக்கள் சக்தி ஒர் அணியாக திரட்டி பிரச்சனையை தீர்க்க ஆரம்பித்தால் பிரச்சனை அரசியல்வாதிகளுக்குதான் .என்பது முத்துசெல்வம் பிரேமின் கருத்து.

ஜாயிஸ் பால் என்கிற நேயர், “ஆம், உத்வேகம் மட்டுமல்ல, தமிழர் ஒழுக்கமும், போராட்ட யுத்தியும், மேலும் ஊக்கம் அளிக்கிறது, தமிழனின் வருங்கால சந்ததிகள் சிதையவில்லை என்பதை காட்டிய, உணர்த்திய போராட்டம்” என்கிறார்.

அரசு ஒத்துழைத்தால் போராட்டம் வெற்றி!இதையே ஊழலுக்கு எதிராக போராட சொல்லுங்கள் பார்ப்போம என்று கேள்வி கேட்டுள்ளார் விஷ்வநாதன்.

தொடர்ந்து இது போன்ற எழுச்சியை காண முடியவில்லை என்று எழுதி தன்னுடைய ஆதங்கத்தை வெளிட்டுள்ளார் ராபர்ட்.

ராமகிருஷ்ணன் சிவ்குமார் என்ற நேயர், “விடுமுறை தொடர்ந்து இருந்ததால்தான் வந்தார்கள். அந்த பிரச்சனையோடு முடிந்தது” என்று மக்களின் பங்கேற்பு பற்றி தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :