அரசு கேபிள் டிவி சேவை துவங்கியது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 செப்டம்பர், 2011 - 11:58 ஜிஎம்டி
டிஷ் ஆன்டெனா

தமிழகத்தில் அரசு கேபிள் டிவி சேவையை முதல்வர் ஜெயலலிதா வெள்ளியன்று துவங்கிவைத்துள்ளார்.

சென்னை தவிர தமிழகத்தின் மற்ற இடங்களில் இந்த கேபிள் டிவி சேவை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த சேவைக்கு ரூ.70 மாதக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

90 சானல்கள் வரை அரசு கேபிள் டிவியில் தெரியும். ஆரம்பத்தில் இலவச சானல்கள் மட்டும் இந்த சேவையின் ஊடாக வரும், படிப்படியாக கட்டண சானல்களும் இதில் சேர்க்கப்படவுள்ளன.

சென்னை தலைமைச்செயலகத்தில் அரசு கேபிள் டிவி துவக்க நிகழ்ச்சி நடந்தது.

அரசு கேபிள் டிவி தொடங்கியது

கல்யாணசுந்தரம் - கேபிள் டிவி ஆபரேட்டர்(சேலம்)

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

தமிழகம் எங்கிலும் இருந்து முப்பத்து நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டிவி சேவையில் சேர்ந்துள்ளனர். இவர்கள் வழியாக இந்த கேபிள் சேவைக்கு சுமார் ஒன்றரை கோடி சந்தாதாரர்கள் கிடைப்பார்கள் எனத் தெரிகிறது.

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஒரு இணைப்புக்கு தாங்கள் வசூலிக்கும் ரூ.70ல் ரூ.20வதை அரசுக்கு செலுத்துவார்கள்.

முந்தைய தி.மு.க. அரசு அரசு கேபிள் டிவி நிறுவனத்தை சுமார் ஐம்பதாயிரம் சந்தாதாரர்களுடன 2007ஆம் ஆரம்பித்திருந்தது என்றாலும், சேவையின் தரம் குறைந்துபோய் சந்தாதாரர்கள் எண்ணிக்கை சொற்பமானது.

அரசு கேபிள் டிவி சேவை மீண்டும் வழங்கப்படும் என்பது அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ஒரு வாக்குறுதியாக இடம்பெற்றிருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.