ஆப்கான் படைகளுக்கு இந்தியா பயிற்சி: ஒரு ஆய்வு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 அக்டோபர், 2011 - 16:31 ஜிஎம்டி
இந்தியப் பிரதமரும் ஆப்கான் அதிபரும்

இந்தியப் பிரதமரும் ஆப்கான் அதிபரும்

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சி அளிக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியிருக்கிறது.

2014ல் ஏற்கனவே அறிவித்தபடி, அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் ஆப்கானிஸ்தானில் செல்வாக்கை நிலைநாட்ட அண்டை நாடுகள் பல போட்டி போடும் நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானை தனது கேந்திர விவகாரக் கொல்லைப்புறமாகக் கருதும் பாகிஸ்தானுக்கு இந்த ஒப்பந்தம் எரிச்சலைத் தரும் ,எனவே இது இந்திய பாகிஸ்தான் உறவுகளைப் பாதிக்கும் என்றும் சில நோக்கர்கள் கருதுகிறார்கள்.

ஆனால் இப்படியான பயிற்சிகளை இந்தியா ஏற்கனவே அளித்து வருகிறது என்றும் அது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றும் தமிழோசையிடம் தெரிவித்தார், இந்தியாவின் அமைச்சரவை செயலகத்தின் ஓய்வு பெற்ற கூடுதல் செயலரும், பாதுகாப்பு ஆய்வாளருமான பி.ராமன்.

தற்போது ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு பயிற்சிகளை அளித்து வரும் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளை விட இந்தியாவுக்கு பாகிஸ்தான் குறித்த விடயங்கள் நன்கு தெரியும் என்பது, அந்தப் படையினரை இந்தியா பயிற்றுவிக்க ஒரு முக்கிய காரணம் எனவும் ராமன் கூறுகிறார்.

ஆப்கான் படைகளுக்கு இந்தியா பயிற்சி

இந்தியா ஆப்கானிஸ்தான் உடன்பாடு குறித்து ஆய்வாளர் பி ராமன் பேட்டி

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இந்தியத் தரப்பு ஆப்கான் படையினருக்கு பயிற்சி அளிப்பதற்கு அமெரிக்காவும் மறைமுக ஆதரவை தெரிவித்துள்ளது என்று சுட்டிக்காட்டும் அவர், இது பாகிஸ்தானை ஆத்திரமடையச் செய்து, இந்தியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளை அதிகப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது எனவும் ராமன் தெரிவிக்கிறார்.

இந்த உடன்பாடு பாகிஸ்தானின் கவலைகளை அதிகரிக்கச் செய்யும் எனவும், ஆப்கானிஸ்தானில் எந்த வகையிலும் இந்தியாவின் தலையீட்டை ஏற்காது எனவும் உடன்பாட்டை சீர்குலைக்கவும் பாகிஸ்தான் முயலும் எனவும் அவர் கூறுகிறார்.

ஆப்கானிஸ்தானுடன் இந்தியா ஏற்படுத்தியுள்ள இந்த உடன்பாட்டுக்கு பின்னர் இந்தியா பாதுகாப்பு விடயங்களில அதிக விழிப்புடன் இருக்க வேண்டி வரும் எனவும் பாதுகாப்பு ஆய்வாளர் ராமன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

அமெரிக்கா விரும்பியதாலேயே இந்தியா இந்த உடன்பாட்டை கையெழுத்திட்டுள்ளது எனவும் ராமன் கூறுகிறார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.