ஆபத்தில் இந்திய விமானத்துறை?

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 ஜனவரி, 2012 - 18:38 ஜிஎம்டி

இந்தியாவின் பயணிகள் விமானப்போக்குவரத்துத்துறையின் தலைமை இயக்குநர் பரத் பூஷன், இந்தியாவின் பல உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுவனங்களின் நிதி நிலைமைகள் கவலையளிக்கக் கூடிய வகையில் இருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்த நிதி நெருக்கடியானது பயணிகள் பாதுகாப்பு குறித்து பல கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுகவீனத்தை காரணம் காட்டி விமான ஓட்டிகள் விடுப்பு எடுப்பது ஒரு தொற்றுநோய் போல உள்ளது என்றும் அது விமான சேவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனவும் பரத் பூஷன் கூறுகிறார்.

நிதிநிலை மோசமாக இருக்கும் விமான நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்ய நியாயமான காரணங்கள் இருக்கின்றன எனவும் அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆனால் நிதிநிலைமைகளை மட்டுமே கருத்தில் கொண்டு பயணிகளின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது என்று கூற முடியாது என்று கூறுகிறார். இந்தியாவில் குறைந்த கட்டண விமான சேவையின் முன்னோடி என்று கருதப்படும் கேப்டன் ஜி ஆர் கோபிநாத்.

நிதிநிலை நெருக்கடியால் பாதுகாப்புக்கு ஆபத்து இல்லை:கோபிநாத்

நிதிநிலை நெருக்கடிகளால் பாதுகாப்பில் சமரசம் செய்யப்படுவதாகக் கூறுவது சரியல்ல என்கிறார் கேப்டன் ஜி ஆர் கோபிநாத்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

வெளிநாடுகளில் கூட இப்படியான நிதி நெருக்கடியில் பல விமான சேவை நிறுவனங்கள் இருக்கின்றன என்றும் அவர் கூறுகிறார். ஒரு விமானம் விபத்தை எதிர்கொண்டு விட்டதென்றால் அந்த நிறுவனமே திவாலாகிவிடும் எனும் நிலை இருக்கும் போது, பாதுகாப்பு விஷயங்களில் சமரசங்களை செய்யமாட்டார்கள் எனவும் அவர் கூறுகிறார்.

அமெரிக்கா போன்ற நாட்டில் கூட 90 சதவீதமான விமான நிறுவனங்கள் திவாலாகும் நிலையில்தான் உள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

எனினும், உதிரிப்பாகங்கள் கூட வாங்கும் நிலையில் பல விமான நிறுவனங்கள் இல்லாத நிலையில், அவர்கள் விமானத்தை தரமாக வைத்திருந்து பாதுகாப்பாக இயக்குவார்கள் என்று கருத முடியாது என்கிறார் இந்திய விமானப் பயணிகள் சங்கத்தின் தலைவரான சுதாகர் ரெட்டி.

பல நிறுவனங்களில் விமான ஓட்டிகள் உட்பட பலருக்கு சரியான நேரத்துக்கு ஊதியங்களை கொடுக்க முடியாத சூழல் உள்ளபோது, அவர்கள் மருத்துவ விடுப்பு உட்பட பலவித காரணங்களால் விடுப்பில் செல்லும் போது எப்படி விமான சேவையின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் எனவும் சுதாகர் ரெட்டி கேள்வி எழுப்புகிறார்.

பயணிகள் பாதுகாப்பு சமசரப்படுத்தப்படுகிறது: சுதாகர் ரெட்டி

இந்தியாவில் விமானப் பயணிகளின் பாதுகாப்பு சமசரமே செய்யப்படுகிறது என்கிறார் சுதாகர் ரெட்டி

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.