தில்லி இஸ்ரேலிய தூதரக கார் தாக்குதல்: பத்திரிகையாளர் கைது

குண்டுத் தாக்குதலுக்குள்ளான கார் படத்தின் காப்புரிமை PTI
Image caption குண்டுத் தாக்குதலுக்குள்ளான கார்

இந்தியத் தலைநகர் தில்லியில் சென்ற மாதம் இஸ்ரேலிய ராஜீய அதிகாரி ஒருவரின் கார் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் பத்திரிகையாளர் ஒருவரை இந்தியப் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

இந்த குண்டுத் தாக்குதலில் இஸ்ரேலிய தூதரகத்தில் பாதுகாப்பு விவகாரங்கள் சம்பந்தமான அதிகாரி ஒருவரின் மனைவி காயமடைந்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்படும் முதல் நபர் மொகம்மது கஸ்மி என்ற இந்த பத்திரிகையாளர்தான்.

இவர் அடிக்கடி இரான் சென்றுவந்த ஒருவர் என்று கஸ்மியுடன் பணியாற்றியிருந்த தில்லியைச் சேர்ந்த பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

இந்த குண்டுத் தாக்குதலுக்கு இஸ்ரேல் இரான் மீதுதான் பழிசுமத்துகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.