சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் சுறுசுறுப்பான வாக்குப்பதிவு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 18 மார்ச், 2012 - 15:18 ஜிஎம்டி
ஓட்டுப் போடுபவர் கையில் மை

தமிழகத்தில் சங்கரன்கோவில் தொகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவில் 78 சதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

அந்தத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் கருப்பசாமி, காலமானதை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக இப்போது தனியாகப் போட்டியிட்டது.

அதிமுக சார்பில், சங்கரன் கோவில் நகராட்சித் தலைவி முத்துலட்சுமியும், திமுக சார்பில் ஜவஹர் சூரியகுமாரும் போட்டியிடுகிறார்கள்.

திமுகவுக்கு கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவளித்துள்ளன.

கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலைப் புறக்கணித்த மதிமுக, இத்தேர்தலில் மதிமுக தனித்துப் போட்டியிட்டது.

வரும் 21-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு கடுமையாக உள்ள நிலையில், அரசுக்கு எதிராக மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தக்கூடும் என்று கூறப்படும் நிலையில், இத்தொகுதியில் வெற்றி பெறுவதை அதிமுக அரசு கெளரவப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டிருப்பதாக நோக்கர்கள் கூறுகிறார்கள்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.