புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அதிமுக அமோக வெற்றி

பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை BBC World Service

தமிழகத்தின் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக கட்சி வேட்பாளர் கார்த்தி தொண்டைமான், தேமுதிக வேட்பாளர் ஜாகிர் ஹுசைனை விட எழுபத்தோராயிரம் வாக்குகள் அதிகம் பெற்று பெருவெற்றி அடைந்துள்ளார்.

மொத்தத்தில் கார்த்திக் தொண்டைமான் ஒரு லட்சத்து ஓராயிரம் வாக்குகளை எடுத்துள்ளார்.

தேமுதிக வேட்பாளர் முப்பதாயிரம் வாக்குகளை பெற்றுள்ளார்.

சங்கரன்கோவிவில் நடந்த இடைத்தேர்தலில் டெபாஸிட் இழந்த தேமுதிக, இம்முறை தனது டெபாஸிட்டை தக்கவைத்துக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த இடைத் தேர்தலில் திமுக போட்டியிடவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமரன் சாலை விபத்தில் பலியானதை அடுத்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.