நிலக்கரி ஊழல்: மன்மோகன் சிங்கிற்கு எதிராக உயரும் போர்க்கொடி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 ஆகஸ்ட், 2012 - 18:41 ஜிஎம்டி
குற்றச்சாட்டை காங்கிரஸ் கூட்டணி எப்படி கையாளப்போகிறது?

குற்றச்சாட்டை காங்கிரஸ் கூட்டணி எப்படி கையாளப்போகிறது?

இந்தியாவில், நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு நடைபெற்றதில் முறைகேடு நடந்ததாக மத்திய கணக்குத் தணிக்கை ஆணையம் அளித்த அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2005-2009 காலகட்டத்தில் அந்தத் துறைக்குப் பொறுப்பாக இருந்த தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான பாஜக போர்க்கொடி தூக்கியுள்ளது.

அதுதொடர்பில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் முடக்கப்பட்டன.

இந்நிலையில், இரண்டாம் தலைமுறை ஒதுக்கீட்டு ஊழல் விவகாரத்தில் காட்டிய அதே தீவிரத்தை இந்தப் பிரச்சினையிலும் பாஜக தொடர்ந்து கடைபிடிக்குமா என்று தமிழோசை எழுப்பிய கேள்விக்கு அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் அளித்த பதிலை இங்கு கேட்கலாம்.

நிர்மலா சீதாராமன்

'மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும்': பாஜக போர்க்கொடி

பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் பதில்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இதேவேளை, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை ஆளும் காங்கிரஸ் கூட்டணி புறக்கணிப்பது சரியான அணுகுமுறையா என்ற கேள்விக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தமிழோசைக்கு அளித்த பதிலையும் இங்கு கேட்கலாம்.

இணையமைச்சர் நாராயணசாமி

மன்மோகன் மீது நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டு: காங்கிரஸ்?

காங்கிரஸ் இணை அமைச்சர் நாராயணசாமி பதில்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.