ராஜபக்ஷ வருகையை எதிர்த்து தீக்குளித்தவர் சாவு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 18 செப்டம்பர், 2012 - 09:02 ஜிஎம்டி

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியா வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சேலத்தில் திங்கட்கிழமை தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

ஷேர் ஆட்டோ டிரைவர் விஜயராஜ் "இந்தியாவுக்கு ராஜபக்ஷ வருவதைத் தடுக்க வேண்டும்" என்று முழக்கமிட்டவாறே திங்கட்கிழமை காலை சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே தமது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

உடலில் 80 சதம் தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனளிக்காமல் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் செப்டம்பர் 21ம் நாள் மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெறும் புத்த மத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கவிருக்கிறார்.

அவரது இந்திய வருகைக்கு தமிழகத்தின் பல கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

இலங்கை அதிபரை எதிர்த்து நேரடியாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது ஆதரவாளர்களுடன் சாஞ்சி புறப்பட்டுள்ளார்.

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.