பிரதமரை பேசவிடாமல் கூச்சலிட்ட வழக்கறிஞர்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 செப்டம்பர், 2012 - 11:07 ஜிஎம்டி
இந்தியாவில் அன்னிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும் அரசின் திட்டத்துக்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது

இந்தியாவில் அன்னிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும் அரசின் திட்டத்துக்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது

இந்தியத் தலைநகர் தில்லியில் சர்வதேச சட்ட மாநாடு ஒன்றில் உரையாற்ற முற்பட்ட பிரதமர் மன்மோகன் சிங்கை பேசவிடாமல் கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவித்த ஒருவரை காவல்துறையினர் தடுத்துவைத்துள்ளனர்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞரான குறித்த எதிர்ப்பாளர் தனது மேல்சட்டையை கழற்றியபடி, மேசை மீது ஏறிநின்று பிரதமருக்கு எதிரான கோசமிட்டார்.

அரசாங்கம் அண்மையில் அறிவித்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை எதிர்த்து அவர் குரல் எழுப்பினார்.

அதன்போது, குறித்த எதிர்ப்பாளரை அரங்கிலிருந்து வெளியேற்றும்வரை காத்திருந்த பிரதமர் மன்மோகன் சிங், அதன்பின்னர் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஆதரித்துப் பேசினார்.

இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கவும் இந்தியப் பொருளாதாரம் மீதான நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்பவும் இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் அவசியமானவை என்று பிரதமர் மேடையில் சுட்டிக்காட்டினார்.

இந்திய அரசாங்கம் அண்மையில் அறிவித்த புதிய சீர்திருத்த நடவடிக்கைள் நாடுமுழுவும் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.