துறைமுக மறியலில் அணு எதிர்ப்பாளர்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 செப்டம்பர், 2012 - 11:01 ஜிஎம்டி
சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ஜல் சத்யாகிரகம்

சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ஜல் சத்யாகிரகம்

கூடங்குளம் அணுமின் உலையில் எரிபொருள் நிரப்பும் பணி துவங்கியுள்ள நிலையில், இத்திட்டத்தை எதிர்க்கும் மீனவ அமைப்புக்கள் தூத்துக்குடி துறைமுகத்துக்கு சென்று கடல் வழி முற்றுகைப் போராட்டத்தை ஆரம்பிக்க முயன்றுள்ளனர்.

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இழுவைப் படகுகள் மற்றும் நாட்டு படகுகளில் ஏறி துறைமுகத்துக்கு கப்பல் நுழையும் பாதையை மறிக்க முற்பட்டனர் ஆனால் அவர்கள் கடலிலேயே தடுக்கப்பட்டதாக செய்திகள் கூறிகின்றன. சில மீனவர்கள் படகில் இருந்தபடியே கோசமிட்டனர்.

அணு உலைக்கு எதிராக போராடும் இயக்கதினர் தூத்துக்குடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி மற்றும் சென்னை துறைமுகங்களை மறிக்கும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

போராட்டம் காரணமாக துறைமுகத்தின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அணு உலைக்கு எதிரான சட்ட வழி போராட்டம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.