ராகுல் காந்தி முயற்சியால் காஷ்மீரில் தொழிலதிபர்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 அக்டோபர், 2012 - 17:41 ஜிஎம்டி
ரத்தன் டாடா

ரத்தன் டாடா

ரத்தன் டாடா, குமாரமங்கலம் பிர்லா உள்ளிட்ட இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களை இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்துக்கு அழைத்துச் சென்றார் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ராகுல் காந்தி.

அங்கு காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் தொழிலதிபர்கள் ஆலோசனை நடத்துவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம், அந்த மாணவர்களுக்கு தான் ஏற்கெனவே அளித்த உறுதிமொழியை நிறைவேற்றியிருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த ராகுல் காந்தி, ''கடந்த ஆண்டு இங்கு வந்து அந்த மாணவர்களுடன் பேசியபோது, அவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், உறவை மேம்படுத்தவும் முயற்சி எடுப்பதாகத் தெரிவித்தேன். வேலைவாய்ப்புக்கள் தொடர்பாக, தொழில் துறையில் உள்ள முக்கிய பிரமுகர்களுடன் பேச விரும்புவதாக அவர்கள் தெரிவி்ததார்கள். அதனால், தொழில் துறையின் முக்கியப் பிரமுகர்களை அழைத்து வந்திருக்கிறேன். ஆக்கப்பூர்வமாக ஆலோசனை நடத்தினோம். எல்லோரும் இணைந்து அவர்களுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்த முயற்சிப்போம்’, என்றார் ராகுல் காந்தி.

தொழிலதிபர் ரத்தன் டாடா பேசும்போது, இந்த அனுபவம் தனது மனதை நெகிழ வைப்பதாகத் தெரிவித்தார்.

''ராகுல் காந்தி அவர்கள், ஜன்னல் கதவை மட்டுமல்ல, வாசல் கதவையை திறக்கச் செய்திருக்கிறார். தொழில்துறையினர் தற்போது கவனம் செலுத்தி வரும் பகுதிகளுக்கு அப்பாற்பட்டு, காஷ்மீர் மக்களுக்காக, காஷ்மீர் மாநிலத்தன் வளர்ச்சிக்காக என்ன செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டும். மாணவர்களுடன் கலந்துரையாடியபோது, அறிவுச் செறிவும், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வமும், திறமையும் இருப்பதைக் காண முடிந்தது’’, என்றார் தொழிலதிபர் ரத்தன் டாடா.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.