கிங்ஃபிஷர் ஊழியர்களுடன் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 அக்டோபர், 2012 - 10:07 ஜிஎம்டி
கிஷ் ஃபிஷர் விமானம்

கடந்த சில நாட்களாகவே பல பயணங்கள் ரத்தாகியிருந்தன

இந்தியாவின் கிங்ஃபிஷர் விமானப் போக்குவரத்து நிறுவனம், மாதக் கணக்கில் ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்துப் போராடிவரும் தமது ஊழியர்களுடன் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, தமது விமான சேவையை அது மேலும் ஒரு வார காலத்துக்கு நிறுத்திவைத்துள்ளது.

ஊழியர்கள் பலர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியதை அடுத்து இந்நிறுவனம் கடந்த திங்கள் முதல் பல விமானப் பயணங்களை இடைநிறுத்தியிருந்தது.

நேற்று வியாழனன்று, இந்நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர் ஒருவரின் மனைவி, தனது கணவருக்கு மாத சம்பளம் கிடைக்காததால் ஏற்பட்ட பண நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் உயிரை விடுகிறேன் என எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நிறுவனம் தொடர்ந்து ஐந்து வருடங்களாக நஷ்டத்தில் இயங்கிவருகிறது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.