இந்திய தளபதியை தாக்கிய வழக்கில் மேலும் 8 பேர் கைது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 அக்டோபர், 2012 - 17:30 ஜிஎம்டி
லெப் ஜெனரல் பிரார்

லெப் ஜெனரல் பிரார்

லண்டன் வந்திருந்த ஓய்வுபெற்ற இந்தியத் தளபதி குல்தீப் சிங் பிரார் மீது நடத்தப்பட்ட கத்திக் குத்து தாக்குதல் தொடர்பில் பொலிசார் மேலும் எட்டு பேரைக் கைதுசெய்துள்ளனர்.

லண்டனின் மையப் பகுதியில் ஞாயிறு இரவு நான்கு பேர் லெப்டிணண்ட் ஜெனரல் பிராரைத் தாக்கியிருந்தனர். ஆயினும் இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து காவல்துறையால் தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

கடந்த 1984ஆம் ஆண்டு அமிர்தசரஸ் பொற்கோயிலில் தனது தலைமையில் எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு பழிவாங்கும் விதமாக தன் மீது நடத்தப்பட்ட படுகொலை முயற்சி இது என பிரார் கூறியிருந்தார்.

தற்போது கைதான எட்டு பேரையும் சேர்த்து இந்த சம்பவம் தொடர்பில் லண்டனில் தடுத்துவைக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை பதினைந்தாக அதிகரித்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான 78 வயதான ஜெனரல் குல்தீப் சிங் சிகிச்சைக்குப் பின் நாடு திரும்பியுள்ளார். அங்கே அவருக்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.