"கொங்குவேளாளர் ஜாதிமாறி திருமணம் செய்யக்கூடாது"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 அக்டோபர், 2012 - 18:33 ஜிஎம்டி

கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பேரவை கூட்டத்தில், தங்கள் ஜாதிப்பெண்கள் மற்ற ஜாதிக்கரர்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தும் கலப்புத்திருமண எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் இருக்கும் கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் பேரவை என்கிற அமைப்பு ஞாயிற்றுக்கிழமை நடத்திய அவர்களது கூட்டத்தில், கொங்குவேளாள கவுண்டர் ஜாதியைச்சேர்ந்தவர்கள், குறிப்பாக பெண்கள் மற்ற ஜாதிக்காரர்களை திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று வலியுறுத்தும் கலப்புத்திருமண எதிர்ப்பு உறுதிமொழியேற்றனர்.

நில உடைமைச் சமுதாயமான கொங்குவேலாளர் பெண்களை காதலிப்பவர்கள் அவர்களின் சொத்துக்களை, குறிப்பாக நிலங்களை குறிவைத்து காதல் நாடகமாடுவதாகவும் எனவே தங்கள் ஜாதிப்பெண்களை இந்த ஏமாற்றுப் பேர்வழிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே இப்படியான உறுதிமொழி எடுத்துக்கொண்டதாகவும் கூறுகிறார் அந்த அமைப்பின் மாநிலத்தலைவர் மணிகண்டன்.

இது குறித்து பிபிசி தமிழோசைக்கு அவர் அளித்த செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

"கொங்குவேளாளர்கள் காதல் திருமணம் செய்யக்கூடாது"

கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பேரவை கூட்டத்தில், தங்கள் ஜாதிப்பெண்கள் மற்ற ஜாதிக்காரர்களை திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று வலியுறுத்தும் கலப்புத்திருமண எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டது சரி என்கிறார் அதன் தலைவர் மணிகண்டன்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

கொங்குவேலாள கவுண்டர் பேரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட உறுதிமொழியேற்பு சட்டவிரோதமானது என்று பல குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. அப்படி எதிர்ப்பு தெரிவித்த குழுக்களில் ஒன்றான பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கோவை ராமகிருஷ்ணன், கொங்கு வேலாள கவுணடர் சமூகத்தில் அதிகரித்துவரும் காதல் திருமணங்களை தடுக்கும் நோக்கத்தில் இத்தகைய அமைப்புக்கள் இப்படி கூட்டம் கூட்டி மிரட்டுவதாக விமர்சித்தார்.

இப்படியான எதிர்ப்புக்களையும் மீறி ஜாதி மற்றும் மதங்களை கடந்து நடக்கும் காதல் திருமணங்கள் அதிகரிக்கவே செய்யும் என்றும் கூறுகிறார் அவர்.

பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கோவை ராமகிருஷ்ணனின் செவ்வியின் விரிவான ஒலி வடிவத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

"அதிகரிக்கும் ஜாதிமறுப்புத் திருமணங்களை தடுக்க முடியாது"

கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் மத்தியில் பெருகிவரும் ஜாதிமறுப்பு திருமணங்களை தடுப்பதற்காகவே அவர்களின் பேரவை கூட்டத்தில் கலப்புத்திருமண எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டதாக கூறுகிறார் பெரியார் திராவிடர் கழக தலைவர் கோவை ராமகிருஷ்ணன்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.